Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம்

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம்

Posted on December 6, 2021 By admin

எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் கூட்டுத் தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகிறது.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.பிரபுவே நடிக்கிறார். இது இவருக்கு முதல் படமாகும்.

இப்படத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார்.

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத் தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.ஹரிமுருகன், நடன இயக்குநர் – சங்கர், காஸ்டிங் இயக்குநர் – ஆரோக்கியதாஸ், காஸ்ட்யும் டிசைனர் – ரெபேகா மரியா, நிர்வாக தயாரிப்பாளர் – ஆர்.குமரேசன், கே.எஸ்.செந்தில் குமார், மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன் – சதீஷ்வரன்.

அமெரிக்காவில் ஆங்கிலப் படம் மற்றும் டெலிபிலிம்களை இயக்கிய கிரிதரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Cinema News Tags:நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம்

Post navigation

Previous Post: மாநாடு படத்தில் எனக்கு லாபம் வரவில்லை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி??
Next Post: மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு

Related Posts

Cinema News
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா Cinema News
Actress priya Bshankar latest pic-indiastarsnow.com Actress priya Bshankar latest pic Cinema News
Actor AshokKumar Latest pic-inadiastarsnow.com Actor AshokKumar Latest pic Cinema News
“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!! Cinema News
Liger Team - The Vijay Deverakonda, Puri Jagannadh, Charmme Kaur Meets Megastar Chiranjeevi and Superstar Salman Khan. Liger Team – The Vijay Deverakonda, Puri Jagannadh, Charmme Kaur Meets Megastar Chiranjeevi and Superstar Salman Khan. Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme