Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வாஸ்கோடகாமா’ திரைப்படம்

வாஸ்கோடகாமா திரைப்படம் இனிதே பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு

Posted on November 27, 2021 By admin

தமிழ்த் திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருமை நிகழ்வாக சமீபத்தில் 100 வி.ஐ.பி.க்கள் இணைந்து ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா’ ‘
நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன், ஆரியா, வெங்கட் பிரபு, பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன், நடிகைகள் அதுல்யா ரவி, பிரியா பிரகாஷ் வாரியர், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட 100 திரையுலகப் பிரபலங்கள் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் ‘வாஸ்கோடகாமா’ படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்களை நடத்தும் டத்தோ பி.சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை ஆர்.ஜி.கே. எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இப்பூஜையில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன், கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரான டத்தோ பி. சுபாஷ்கரன், இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன், நாயகன் நகுல், இசை அமைப்பாளர் என்.வி.அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இவர் ‘நான் சிரித்தால் ‘ போன்று சில படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளவர். இசை என்.வி.அருண். இவர் எஸ்.பி.பி. கடைசியில் பாடிய பாடலான பாடல் இடம் பெற்ற ‘என்னோட பாட்ஷா’ என்கிற ஆல்பத்திற்கு இசையமைத்தவர்.
சண்டை இயக்கம் – விக்கி. இவர் ‘உறியடி’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்தவர். கலை இயக்கம் – ஏழுமலை. படத் தொகுப்பு – தமிழ்க்குமரன். இவர் ஏராளமான குறும் படங்களுக்குப் படத் தொகுப்பு செய்தவர். நடனக் காட்சிகளை பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார்.
இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் பேசும்போது, “குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்..? அவனது மனநிலையும், குணங்களும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப் பின் எப்படி மாறும் என்பதை சொல்லும் படம்தான் இந்த ‘வாஸ்கோடகாமா’.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர்…” என்றார் இயக்குநர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

Cinema News Tags:வாஸ்கோடகாமா திரைப்படம் இனிதே பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு

Post navigation

Previous Post: இளம் நாயகன் மகேந்திரன் நாயகனாக நடிக்கும் ‘பொண்ணு மாப்பிள்ளை’ படம்
Next Post: ‘RRR’ படத்தின் மூன்றாவது பாடல் சென்னையில் வெளியிடப்பட்டது

Related Posts

Actor Siddhartha Shankar Actor Siddhartha Shankar Cinema News
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – வினோத் ராஜா, இசை – ஏஜே அலிமிர்சாக் , படத் தொகுப்பு -கிஷோர், பாடல்கள் – வித்யாசாகர், பா. இனியவன், செ. ஹரி உத்ரா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி.ஒன். ‘எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ திரை விமர்சனம்!! Cinema News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் களமிறங்க உருவானது புதிய அணி. Cinema News
சிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி' படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் Cinema News
ஷாருக்கானின் 'ஜவான்' பிரீ ரிலீஸ் ஈவன்ட் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின்பிரீ ரிலீஸ் ஈவன்ட் Cinema News
லவ் டுடே’ திரைவிமர்சனம்! லவ் டுடே’ திரைவிமர்சனம்! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme