கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தனது புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகிக் கொண்டிருக்கிறார். தில்ராஜூ தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராகிறது.
இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவியும் நடிப்பதாக சமீபத்தில் செய்தி வெளியான நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது.
அதோடு, ஐந்து மொழிகளில் இப்படம் உருவாவதால், அந்தந்த மொழிகளைச் சேர்ந்த மேலும் சில பிரபல நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையிலும் ஷங்கர் தற்போது ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.