வயது முதிர்ச்சி என்பது பயம் கொள்ள செய்யும் ஒன்றாகும் வயது அதிகமாக அதிகமாக பல நோய்களுக்கு ஆளாக நேருமே என்ற கவலையும் சேர்ந்து பயத்தை உண்டாக்கும் எனினும் நீண்ட நாட்களுக்கு இளமை அழகு பற்றி சில வரிகள் பின்பற்றுங்கள்.
1.தேன்
முகத்தை கழுவிவிட்டு சுத்தமான தேனை 20 நிமிடங்கள் முகத்தில் பூசினால் முகம் சுருக்கங்கள் நீங்கும் என்பது வயதான சருமத்திற்கு அதிசயங்களை செய்யும் ஆக்ஸிஜனேற்ற ஆன்ட்டி பாக்டீரியா மற்றும் ஈரப்பதம் நிறைந்த பண்புகளைக் கொண்டுள்ளது.
2.பன்னீர்
– பன்னீரில் சருமத்தை இறுக்கும் பண்புகள் உள்ளது மேலும் சருமத்தை ஆரோக்கியமாக ஒளிர செய்யும் இதை சந்தனப் பொடியுடன் கலந்து பயன்படுத்தும் போது சருமம் கரும்புள்ளிகளை குறைப்பதோடு சரும நிறத்தையும் பராமரிக்க உதவும்.
3.அத்தியாவசிய எண்ணெய்கள்
– வாதுமை எண்ணெய் 8 துளி சந்தன எண்ணெய் 4 துளி செவ்வந்திப்பூ எண்ணெய் 6 துளி மற்றும் கேரட் விதை எண்ணெய் 5 துளிகள் ஆகியவற்றை கலந்து எடுத்துக் கொள்ளுங்கள் தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் கருவளையங்கள் கருப்பான பகுதிகளின் மீது தடவிக் கொண்டு உறங்குங்கள்.
4.எலுமிச்சைச்சாறு
எலுமிச்சை சாறு கரும்புள்ளிகளை குறைத்து வயதை குறைவாக காட்டும் பண்புகள் கொண்டது மேலும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடலில் நச்சுத்தன்மை வெளியேறுவ
தோடு சருமமும் பொலிவடையும்.
5.ஆமணக்கு எண்ணெய்
– ஆமணக்கு எண்ணெய் ஒரு சில துணிகள் எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாகத் தேய்த்து (மசாஜ்) விடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை செய்து இரவு முழுவதும் அப்படியே இருக்கும்படி விட்டுவிடுங்கள் இது சருமத்தை மென்மையாக்குவதோடு சுருக்கங்களை முடியும் குறைக்கும்.
– அண்ணாச்சி பழம் பைட்டோ கெமிக்கல்களையும் நுண்ணூட்ட சக்திக்களையும் கொண்டுள்ளது இது வயதாவதற்கான முதல் அறிகுறிகளை அகற்ற உதவுகிறது. முகத்தை சுத்தம் செய்து அன்னாசி பழ துண்டுகளை 5 நிமிடங்கள் முகத்தில் நன்கு தேய்க்கவும் வாரத்திற்கு 2-3 இதனை செய்தால் சருமம் பாதுகாக்கப்படுவதோடு பொலிவு அடையும்.