சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்பு வரை சென்னையிலேயே நடைபெற்ற இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே நடைபெற்று வருகின்றது.
தேர்தல் முடிந்த மறுநாள் தான் ரஜினிகாந்த் ஐதராபாத் கிளம்பி சென்றார். தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ரஜினியுடன் காமெடி நடிகர் சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ரஜினி உடன் சூரி இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இந்நிலையில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ள சூரி, “தலைவர் ஷூட்டிங் ஸ்பாட்டுல கலக்குறாரு.. வேற லெவல் எனர்ஜி” என தனது டுவிட்டர் பக்கத்தில் சிலாகித்து கூறியுள்ளார்.