Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி

Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக, அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி

Posted on April 1, 2021April 1, 2021 By admin No Comments on Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக, அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி

Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக, அதர்வா முரளி,  இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி !

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917, புகழ்பெற்ற The Revenant, The Raid படத்தொடர் எல்லாம் இம்மாதிரி ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சிகளுக்காக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இம்மாதிரியான முயற்சிகள் தீவிரமாக நிகழ்ந்ததில்லை. முதல் முறையாக Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது. ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் ஆக்சன் காட்சியாக, இக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சாம் ஆண்டன் இதுகுறித்து கூறியதாவது…

இது எனது நீண்ட நாள், கனவு முயற்சி. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களும், பல காலம் முன்பாகவே, இப்படி ஒரு ஆக்சன் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். இப்படத்தில் அந்த கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் சுறுசுறுப்பும், உத்வேகமும் நிறைந்த நடிகர் அதர்வா முரளி போன்ற நாயகன் அமைந்ததால் தான் இது சாத்தியமானது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியை திட்டமிட்டு எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. திட்டமிட்ட பிறகு ஒரு நாள் மட்டுமே நாங்கள் ரிகர்சல் செய்தோம். படக்குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பால் இக்காட்சி அற்புதமாக வந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு அதர்வா இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக மாறிவிடுவார்.

Pramod Films தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறியதாவது..

இந்த ஆக்சன் காட்சி, சினிமாவில் ஆக்சன் படங்களுக்கே ஒரு பெரும் மைல்கல்லாக இருக்கும். நடிகர் அதர்வா அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, அவரது உழைப்பு போற்றப்பட வேண்டியது. இந்த அற்புதமான காட்சியை வடிவமைத்ததற்கு திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த காட்சியை மிக அழகாக படம்பிடித்ததில் ஒளிப்பதிவு குழுவினரின் பங்கு மிகப்பெரியது. இவையனைத்திற்கும் தலைமை வகித்த, மிகப்பெரும் கற்பனை திறன் மிக்க இயக்குநர் சாம் ஆண்டன் அவர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களின் Pramod Films சார்பில் இந்த ஆக்சன் காட்சி உலக சினிமா வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் பெருமை கொள்கிறோம்.தர்வா முரளி,  இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி

Cinema News Tags:அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், தர்வா முரளி

Post navigation

Previous Post: இந்தி சிங்கிளில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் அல்லு சிரீஷ்
Next Post: 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார்

Related Posts

பாலாவுடன் ஒரு படத்தில் சூர்யா!! பாலாவுடன் ஒரு படத்தில் சூர்யா!! Cinema News
சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு Cinema News
சிட்தி " (SIDDY) இசை வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் ரஜினி போன் செய்து என்ன உதவி வேண்டும் என்று கேட்டார் சிட்தி இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் பேச்சு. Cinema News
அரசியல் வில்லனாக களவாணி 2ல் அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார் Cinema News
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் டக்கால்டி Cinema News
White Carpet Films Productions* *Filmmaker Venki directorial* *Actor Sathish starrer* *“White Carpet Films Production No. 3”* Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme