Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தலைவி - சென்னையில் நோ... மும்பையில் மட்டும் ஓகே

தலைவி – சென்னையில் நோ… மும்பையில் மட்டும் ஓகே!!!!

Posted on March 25, 2021 By admin No Comments on தலைவி – சென்னையில் நோ… மும்பையில் மட்டும் ஓகே!!!!

விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் கங்கனா ரணவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிக்கும் ‘தலைவி’ படத்தின் டிரைலர் நேற்று கங்கனாவின் பிறந்தநாளை முன்னிட்டு யு டியுபில் வெளியிடப்பட்டது.

அதற்காக நேற்று காலையில் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நேற்றைய நிகழ்ச்சியில் கங்கனாவின் வருகைதான் ஹைலைட். அவருக்கென மத்திய அரசு கொடுத்துள்ள ஒய் பிளஸ் பாதுகாப்புடன்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அவருடைய இருக்கைக்குப் பின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், நிகழ்ச்சி முடியும் வரை துப்பாக்கி ஏந்திய அதிகாரி ஒருவரும் கடைசி வரை இருந்தனர். நிகழ்ச்சியில் கங்கனாவிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றும், அவருக்கு அருகாமையில் சென்று புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

நேற்று மாலை மும்பையில் ‘தலைவி’ டிரைலர் வெளியீட்டிற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கங்கனா, இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், திரைக்கதை எழுதிய ராஜேந்திர பிரசாத், தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு மேடை அருகே வரை விண்டேஜ் காரில் வந்த கங்கனா பட்டுச்சேலை அணிந்து பார்வையாளர்களை கவர்ந்தார்.

அதேசமயம், மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் கங்கனா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சுமார் ஒரு மணி நேரம் வரை அந்த நிகழ்வு நடைபெற்றது.

‘தலைவி’ படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம். இங்கு நடந்த விழாவில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தால் படம் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்திருக்கும்.

அப்படியிருக்கு சென்னையில் அதைப் புறக்கணித்துவிட்டு மும்பைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் கங்கனா ரணவத். ஹிந்தித் திரையுலகம் மீது அவருக்குள்ள பாசத்தை இது காட்டுகிறது.

தலைவி - சென்னையில் நோ... மும்பையில் மட்டும் ஓகேதலைவி – சென்னையில் நோ… மும்பையில் மட்டும் ஓகே

Cinema News Tags:தலைவி - சென்னையில் நோ... மும்பையில் மட்டும் ஓகே

Post navigation

Previous Post: இயக்குனர் சக்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சி கே.எஸ்.ரவிக்குமார், P.வாசு நடிகர் ஆர்யா, சசிக்குமார், ஆரி, அசோக், நாசர், மாரிமுத்து
Next Post: ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எங்க குலசாமி’

Related Posts

இசக்கி குடும்ப வாரிசான நான் இசக்கி குடும்ப வாரிசான நான் Cinema News
Abhishek Agarwal’s The Kashmir Files Wins The Nargis Dutt Award for Best Feature Film on National Integration at the 69th National Film Awards 2023* Cinema News
NTR 30 Team unleashed a massive Motion Poster NTR 30 Team unleashed a massive Motion Poster Cinema News
But how will I THANK YOU AMMA for all that you have done for me… But how will I THANK YOU AMMA for all that you have done for me… Cinema News
நடிகர் மெட்ரோ ஷிரிஷ், 150 ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு பொங்கல் மளிகை பொருட்கள் வழங்கியுள்ளார் ! Cinema News
Actor Sivakarthikeyan Upcoming Movie Maaveeran Actor Sivakarthikeyan Upcoming Movie Maaveeran Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme