Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம், சோனி லிவ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் ஸ்டாக்கர்ஸ்

ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம், சோனி லிவ் நிறுவனத்துடன் இணைந்து “தமிழ் ஸ்டாக்கர்ஸ்”

Posted on March 24, 2021March 24, 2021 By admin No Comments on ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம், சோனி லிவ் நிறுவனத்துடன் இணைந்து “தமிழ் ஸ்டாக்கர்ஸ்”

ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம், சோனி லிவ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் ஸ்டாக்கர்ஸ் என்ற திரில்லருடன் தன் OTTபயணத்தை இனிதே தொடங்குவதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறது.

செய்தி வெளியீடு

75 ஆண்டுகளுக்குமேலாக தரமான கதையம்சம் உள்ள படங்கள் மூலம் , திரையுலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை மக்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. புத்தம் புதிய, புதிரான, திரில்லர் கதைக்களம் கொண்ட “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற இப்படைப்பை டைரக்டர் திரு.அறிவழகன் இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு அதன் யதார்த்தங்களை சுவைபடச் சொல்லும் “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற தொடரின் மூலம் தன் OTT பயணத்தை சோனி லிவ்-ல் தொடங்குகிறது.
ஒரு படைப்பை சட்டவிரோதமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் நகல் எடுப்பது பெரும் குற்றம் மட்டுமின்றி, படைப்புத்திருட்டு என்பது, உலகெங்கும் உள்ள படைப்பாளர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகும். இந்தியாவில், தமிழ் திரையுலகம், பல்வேறு ஆன்லைன் திருட்டு வலைத்தளங்களின் காரணமாக இந்த பிரச்சினையுடன் முடிவில்லாத போரை நடத்தி வருகிறது. இந்தக் கதை அந்த திருட்டு உலகின் இருண்ட பக்கத்தை ஆழமாக சென்று காட்டுகிறது. மேலும் திருட்டு உள்ளடக்கத்தை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள குழுவை அடையாளம் காட்டுவதற்கு திரைத்துறையின் தொடர்ச்சியான போரை பற்றியும் சொல்கிறது.

இந்த படைப்பு பொழுது போக்குகாக மட்டும் இன்றி அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம். இந்த படைப்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவர இருக்கிறது.

அருணா குகன், அபர்ணா குகன் ஷாம், ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ்

“தமிழ் ஸ்டாக்கர்ஸ்”ல் படைப்பு திருட்டுக்கு எதிரான தமிழ் திரைத்துறையின் இடைவிடாத போரின் கேள்விப்படாத அம்சங்களையும், அதை எதிர்கொள்வதற்கான வழிகள் பற்றி சொல்லியிருக்கிறோம். SONY LIV உடன் இணைந்து பார்வையாளர்களிடம் இதைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம், இந்த படைப்பு ஒரு தலைப்பு செய்திக்கு பொருத்தமான புதிரான கதை அம்சத்துடன் விளங்குகிறது. அறிவழகன் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனருடன், இணைந்து வெற்றியை உறுதி செய்யும் என்று நம்புகிறோம்.

டேனிஷ்கான் – வணிகத் தலைவர் – சோனி லிவ், ஸ்டுடியோ நெகஸ்ட் & சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா

“SONY LIV” நாங்கள் எங்கள் தமிழ் மொழி LIV ஒரிஜினல் ஸ்லாட் மூலம் “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற படைப்பை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதை ஒரு மிகவும் சக்தி வாய்ந்த, முன்னோடி படைப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரிக்கிறது. அருணா, அபர்ணா மற்றும் அவர்களின் மிகவும் திறமையான எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தரமான ஈர்க்கப்படும் படைப்பை தருவார்கள் என்று நம்புகின்றோம்.

தமிழ் ஸ்டாக்கர்ஸ் விரைவில் சோனி LIV-ல் மட்டும்./

Cinema News Tags:ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம், சோனி லிவ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் ஸ்டாக்கர்ஸ்

Post navigation

Previous Post: இந்த ஆண்டில் நல்ல விஷயம் நடக்கும் என்று தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் விஷ்ணுவிஷால்
Next Post: அர்ஜுன் சக்ரவர்த்தி நாடு முழுவதும் விரைவில் வெளியாகிறது

Related Posts

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு Cinema News
realme introduces newest additions to its smartphone & AIOT portfolio - realme 11 Series 5G & realme Buds Air 5 series starting from INR 17499 & INR 3699 realme introduces newest additions to its smartphone & AIOT portfolio – realme 11 Series 5G & realme Buds Air 5 series starting from INR 17499 & INR 3699 Cinema News
Finally Revealed - The Actor to Play Mohanlal's Son in Vrushabha. Finally Revealed – The Actor to Play Mohanlal’s Son in Vrushabha. Cinema News
நடிகை வித்யா பாலனுக்கு இயக்குனர் பாலியல் தொல்லை? Cinema News
JSK-INDIASTARSNOW.COM இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை JSK! Cinema News
கலகலப்பான குடும்ப படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்* Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme