இயக்குனர் மகிழ் திருமேனியின் உதவியாளரும் அறிமுக இயக்குனருமான சக்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி
இயக்குனர் மகிழ் திருமேனியின் உதவியாளரும் அறிமுக இயக்குனருமான சக்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (மார்ச்.23) சென்னை தியாகராய நகரில் உள்ள சாய் பாபா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் எண்ணற்ற திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சக்திக்கு சினிமா ஒரு கண் என்றால், சேவை மற்றொரு கண். ஆதரவற்ற, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு என தனி அமைப்பே நடத்தி வருகிறார். அதன் மூலம், பல குழந்தைகளின் உணவு, கல்வி செலவு என ஒரு உதவி இயக்குனர் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை தனது விடா முயற்சியில் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
இதற்காகவே திரைத்துறையில் உள்ள பல பிரபலங்கள் இவரிடம் நெருக்கமாக உள்ளனர். இந்நிலையில், நேற்று சக்தியின் திருமண வரவேற்பு நடக்க, அதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், P.வாசு, கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, தனஞ்செயன், நடிகர் ஆர்யா, சசிக்குமார், ஆரி, அசோக், நாசர், மாரிமுத்து, அமீத் பார்கவ், ராஜ்கமல், காளி வெங்கட், தனிகை, டேவிட் சாலமன், வில்லன் நடிகர் சம்பத்குமார், சின்னத்திரை நடிகை கௌதமி உள்ளிட்ட பலர் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
குறிப்பாக, ‘பிக்பாஸ்’ மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ஆரி, இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பலரும் முண்டியடித்து அவருடன் செல்பி எடுக்க முற்பட்டனர். ‘நெடுஞ்சாலை’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, அவரது எந்த படமும் கமர்ஷியல் ரீதியாக சக்ஸஸ் ஆகாத நிலையில், பிக்பாஸ் நான்காவது சீசனில் ஆரி கலந்து கொண்டார்.
இயக்குனர் சக்தி, தனது புதிய படத்தின் பூஜையை வெகுவிரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.