Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் தோப்புக்கரணம்

பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் தோப்புக்கரணம்

Posted on March 2, 2021March 2, 2021 By admin No Comments on பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் தோப்புக்கரணம்

” தோப்புக்கரணம் ” படத்தில் கோகன் ,அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் 2017,18,19 ம் ஆண்டுகளில் மிஸ்டர் இண்டியாவாக வலம் வந்த “ஸ்டீவ் ” நடித்திருக்கிறார்.

இவர்களுடன் படத்தின் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தபடத்தின் கதை மற்றும் திரைக்கதை வசனத்தை கென்னடி ப்ரியன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவை பரணி செல்வம் கவனிக்க, படத்தொகுப்பை லான்சி மோகன் தொகுக்கிறார்.

தயாரிப்பு மற்றும் இயக்கம் பாஸ்கர் சீனுவாசன்.

100 நாட்களில் 100 பாடல்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்த ஷரவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்..பாடல்களை நிகரன் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் ஒரே ஏரியாவில் வசிக்கும் 5 நண்பர்களை அந்த ஏரியாவின் தாதா ஒரு பிரச்சனையில் பொதுமக்கள் மத்தியில் தோப்புக்கரணம் போட வைத்துவிடுகிறார். அதனால் அவமானம் அடைந்த அந்த நண்பர்கள் அந்த தாதாவை பழிவாங்க துடிக்கிறார்கள். இறுதியில் அவர்கள் தாதாவை என்ன செய்தார்கள் தோப்புக்கரணம் போட வைத்தார்களா இல்லை தாதா அவர்களை என்ன செய்தான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

5 கல்லூரி மாணவர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்பதால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 500 கல்லூரி மாணவர்களை வரச்செய்து அதில் 5 மாணவர்களை தேர்வுசெய்து நடிக்க வைத்துள்ளோம்.

திருச்சி, மதுரை, கோவை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்களை தேர்வு செய்து காமெடி மற்றும் இதர கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். முற்றிலும் பொழுது போக்கு படமாக வரவிருக்கும் தோப்புக்கரணம் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் நடை பெற்றது. ஸ்பெஷல் பர்மிஷனில் இது வரை படப்பிடிப்பு நடைபெறாத வீடூர் டேமில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளோம் என்கிறார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்.
பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம்  தோப்புக்கரணம்
பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம்  தோப்புக்கரணம்
பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம்  தோப்புக்கரணம்

Cinema News Tags:பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் தோப்புக்கரணம்

Post navigation

Previous Post: அமலா விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
Next Post: போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் ” புவன் இயக்குகிறார்

Related Posts

சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம் சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம் Cinema News
மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்தும் மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்தும் இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா Cinema News
பிக்பாசின் காதல் மன்னன் யாரு? Cinema News
‘ஸ்கிரிப்டிக்’ சென்னை, பிப்ரவரி 10, 2023:திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ள மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன். Cinema News
சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அசுரன் படத்தை பார்த்து பிரமிப்புடன் பதிவிட்ட தெலுங்கு சூப்பர்ஸ்டார் Cinema News
மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme