நடிகர் ஸ்ரீகாந்த் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது சென்ற ஆண்டு தனித்தனியாக நண்பர்கள், ரசிகர்கள், என சிறப்பாக பிறந்த நாளை கொண்டாடினேன். ஆனால் கொரோனா காரணமாக பாதுகாப்பை கருதி இவ்வாண்டு அவ்வாறு செய்ய இயலவில்லை. மேலும் இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நல்ல படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன, இன்று மிருகா ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் தனுஷ், ஆர்யா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பரத் ஆகியோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் நடிகர் தனுஷ் அவர்கள் வெளிநாட்டில் இருந்த போதிலும் நேரம் பார்க்காமல் ஆதரவு தெரிவித்துள்ளார். அனைரின் ஆதரவுக்கும் நன்றி. அடுத்தடுத்து சிறந்த படங்கள் கைவசம் உள்ளது. தொடர்ந்து இதே போல் உங்களை மகிழ்விப்பேன். அனைவரின் ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி…
