சென்னையில் இருக்கும் கால் சென்டர் ஒன்றில் வேலை செய்கிறார் விஜே சித்ரா. டார்கெட்டை அடைய முடியாததால் வேலையை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார். இவர் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனையில் இருக்கிறார்கள்.
அதே சமயம் மர்ம நபர் ஒருவர் போனில் சித்ராவுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கிடையில் ஊரில் மர்மமான முறையில் கொலைகள் நடக்கிறது. சென்னை ஆந்திரா எல்லையில் ஒரு பெண்ணின் சடலமும் கிடைக்கிறது.
இறுதியில் சித்ரா டார்கெட்டை அச்சீவ் செய்து வேலையை காப்பாற்றிக் கொண்டாரா? சித்ராவிற்கு போனில் தொந்தரவு கொடுத்தது யார்? மர்மக் கொலைகள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் விஜே சித்ரா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கோபம், பயம், சிரிப்பு என தனக்கு கொடுத்த வாய்ப்பை சிறப்பாகவே செய்து இருக்கிறார். மற்ற நிறைய கதாபாத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால் யாருமே மனதில் நிற்கவில்லை.
இந்த படம் பெண்களுக்கான படம், இளைஞர்களுக்கான படம், வெற்றியடைய போராடுபவர்களுக்கான படம், என சொல்லிக்கொண்டே போகலாம். இவை அதிகப்படியாக இருப்பதால் படம் சுவாரஸ்யத்தை இழக்கிறது.
தேவையற்ற கதாபாத்திரங்கள், அவர்கள் அனைவரும் தத்துவம் பேசுவது என காட்சிகளை திணித்து இருக்கிறார் இயக்குனர் சபரீஸ் எம். சொல்ல வந்த விஷயத்தை தெளிவில்லாமல் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார். படத்தில் மெடிக்கல் கிரைம், பெண்கள் பாதுகாப்பு சொல்லியும் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. இவரின் ஒளிப்பதிவும் கதைக்கு கை கொடுக்கவில்லை. தமீன் அன்சாரியின் இசை பக்கபலமாக இருக்கிறது. calls film review-indiastarsnow.com