Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் - ஆனந்தி நடிக்கும் “நதி-indiastarsnow.com

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் நதி

Posted on February 16, 2021 By admin No Comments on மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் நதி

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி.”

கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். ‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.

இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.

“நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, A.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக M.S.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக ‘கனா’ படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர்.

“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் - ஆனந்தி நடிக்கும் “நதி-indiastarsnow.com

Cinema News Tags:மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் - ஆனந்தி நடிக்கும் “நதி-indiastarsnow.com

Post navigation

Previous Post: பிரமாண்ட “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா !
Next Post: மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த யாமா டீசர்!!!

Related Posts

மாநாடு சிம்பு ரசிகர்கள் உற்சாகம் மாநாடு சிம்பு ரசிகர்கள் உற்சாகம் Cinema News
எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 100 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து, சாதனை படைத்துள்ளது SS Rajamouli’s ‘RRR’ scales 1000 Million streaming minutes on ZEE5 Cinema News
anmirniyal film-review -indiastarsnow.com அன்பிற்கினியல் படத்தின் திரைவிமர்சனம் Cinema News
Sivakarthikeyan in upcoming magnum opus ‘Maaveeran’ Sivakarthikeyan in upcoming magnum opus ‘Maaveeran’ Cinema News
தமிழ் சினிமாவில் 1000 கோடிக்குப் படமெடுத்தாலும் இதுதான் கதி தமிழ் சினிமாவில் 1000 கோடிக்குப் படமெடுத்தாலும் இதுதான் கதி Cinema News
Fitness Freak actor Ramya stunning photoshoot Gallery-indiastarsnow.com Fitness Freak actor Ramya stunning photoshoot Gallery Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme