Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Yuvan Shankar Raja’s “Top Tucker-indiastarsnow.com

சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல் !

Posted on February 16, 2021 By admin No Comments on சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல் !

சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல் !

தென்னிந்திய திரையுலகின் இசை பிதாமகன்களில், ஒருவராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரௌடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, அவரை பின்பற்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் ( Top Tucker) எனும் ஒரு சுயாதீன இசை பாடலில் இணைந்துள்ளார்.

இப்படாலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் தற்போதைய இளைஞர்களின் கண்கவர் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார். இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா தானே பாடியுள்ளார். மேலும் ஜொனிடா காந்தி அவர்களும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார்.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் YouTube தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் ரசிகர்களின் பார்வை எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மொழி எல்லைகளை கடந்து, தற்போது அனைத்து இசை ரசிகர்களையும் கவர்ந்து, சாதனை படைத்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் திரை இசையல்லாத சுயாதீன இசை பயணம் ஜூலை 1999ல் “The Blast” ஆல்பத்தில் துவங்கியது. இந்த ஆல்பம் தமிழின் முன்னணி பிரபலங்கள் உன்னிகிருஷ்ணன், கமலஹாசன் உட்பட பலர் பாடியுள்ள 12 பாடல்கள் தொகுப்பினை கொண்டது.

தனது U1 Records இணையதளம் மூலம் பல சுயாதீன இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து தனது இசையில் திரை இசை தவிர்த்த சுயாதீன இசை ஆல்பங்களை வளரும் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்குவதில் வெகு ஆர்வமுடன் இயங்கி வருகிறார்.
Yuvan Shankar Raja’s “Top Tucker-indiastarsnow.com
Yuvan Shankar Raja’s “Top Tucker-indiastarsnow.com
Yuvan Shankar Raja’s “Top Tucker-indiastarsnow.com
Yuvan Shankar Raja’s “Top Tucker-indiastarsnow.com

Cinema News Tags:Yuvan Shankar Raja’s “Top Tucker-indiastarsnow.com, சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல் !

Post navigation

Previous Post: திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு
Next Post: Yuvan Shankar Raja’s “Top Tucker” becomes overnight Chartbuster with 25 Million views within short span of launch

Related Posts

தல 60 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிக்கக் உள்ளதாக தகவல் Cinema News
A R Entertainment upcoming project pooja-indiastarsnow.com A R Entertainment upcoming project pooja Cinema News
இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம் இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம் Cinema News
Sivakarthikeyan Productions in association with The Little Wave Productions presents ‘Koozhangal’ fame P.S.Vinothraj directorial Soori-Anna Ben starrer “Kottukkaali” Cinema News
ஆஹா வழங்கும் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு ! ஆஹா வழங்கும் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு ! Cinema News
கார்த்தி – ஜோதிகா படத்தில் இணைந்த மற்றொரு நடிகை Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme