Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

avm -indiastarsnow.com

எ. வி. எம் ஸ்டுடியோவுக்குள் உருவாகியுள்ள சசிகலா தயாரிப்பு நிறுவனம்!

Posted on February 15, 2021 By admin No Comments on எ. வி. எம் ஸ்டுடியோவுக்குள் உருவாகியுள்ள சசிகலா தயாரிப்பு நிறுவனம்!

எ. வி. எம் ஸ்டுடியோவுக்குள் உருவாகியுள்ள சசிகலா தயாரிப்பு நிறுவனம்!avm -indiastarsnow.com

கொரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட துறைகளில் பெருமளவு பாதிக்கப்பட்டது சினிமா துறை ஆகும், திரைத்துறை தற்போதுதான் தன் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் இளம் இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ் , குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் பட தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் இது இளம் மாணவ இயக்குனர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்களுக்கு புரோடக்ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்ஷனிற்கு தேவையான உதவிகளையும் அத்தோடு மேலும் சில சிறப்பு சலுகைகளையும் செய்ய தயாராக உள்ளது என்பதை இதன் நிர்வாகத இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார். சினிமா துறை சார்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் “Freedom of Film making ” எனும் தாராக மந்திரத்துடன் விரைவில் இதன் பணிகள் துவங்கவுள்ளன. இதனை பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள், நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். இதில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இது வாய்ப்புக்காக காத்திருக்கும் கலைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது அதன் கட்டமைப்பிலே புரிகிறது. மேலும் இந்நிறுவனத்திலிருந்து பல தரமான கலைஞர்கள் வெளி வருவார்கள் என கூறியிருந்தார். அதற்கடுத்து நடிகை தன்ஷிகா அவர்கள் பேசுகையில் நாம் படங்களின் விமர்சனங்களை ஒரு நொடியில் விவரித்து விடுகின்றோம். ஆனால் திரைக்கு பின் பல கலைஞர்கள் உழைக்கின்றனர். அத்தகு கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்நிறுவனம் அமைந்திருப்பது சிறப்பு எனக் கூறியிருந்தார்.என தெரிவிக்கப்பட்டுள்ளார். இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்கள் பேசுகையில் குட்டி எவிம் விரைவில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் விரைவில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடும்.avm -indiastarsnow.com

Cinema News Tags:avm -indiastarsnow.com, எ. வி. எம் ஸ்டுடியோவுக்குள் உருவாகியுள்ள சசிகலா தயாரிப்பு நிறுவனம்!

Post navigation

Previous Post: நடிகையான நிதி அகர்வாலுக்கு, தமிழகத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி பாலாபிஷேகம் செய்து உள்ளனர்
Next Post: திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

Related Posts

மகா கவிதை கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு* Cinema News
கிச்சா சுதீப் நடிப்பில், “விக்ராந்த் ரோணா வெளிநாட்டு விநியோகத்தில் சாதனை படைத்துள்ளது ! கிச்சா சுதீப் நடிப்பில், “விக்ராந்த் ரோணா வெளிநாட்டு விநியோகத்தில் சாதனை படைத்துள்ளது ! Cinema News
Naan-Sirithal-Audio-Launch நான் சிரித்தால்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் Cinema News
It’s a wrap for Mammookka in ‘Bramayugam Cinema News
A Short Film contest-indiastarsnow.com A Short Film contest Cinema News
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸில் 'பதான்' பட சாதனையை முறியடிக்கும் Trade experts say, Shah Rukh Khan’s ‘Jawan’ will surely beat ‘Pathaan’ at the South box office Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme