நாளை பாஜகவில் இணைகிறார் சிவாஜி மகன் ராம்குமார்!
நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார் பாரதிய ஜனதா கட்சியில் நாளை இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகனை கமலாலயத்தில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதால் அக்கட்சியின் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பா.ஜ.க.,வின் நாளை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக பா.ஜ.க.,வில் இணைந்து வரும் நிலையில், சென்னையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன், ராம்குமார் பாரதிய ஜனதா கட்சியின் இணைய இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, நாளைய தினம் தமிழக பா.ஜ.க., பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் முன்னாள் சென்னையின் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பா.ஜ.க.,வில் இணைய உள்ளார்.