Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Ram Gopal Varma's

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’

Posted on February 1, 2021 By admin No Comments on ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’

Ram Gopal Varma's
தமிழ்-தெலுங்கு-மலையாளம்-கன்னடம்-ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது..

திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை யுஎஃபோ மூவிஸ் இந்தியா லிமிடட் (UFO Moviez India Ltd) விநியோகிக்கிறது. 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
ஆக்‌ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப் பின்னணி என பல்வேறு பின்புலங்களில் உணர்வுகள் தத்ரூபமாக, சில நேரங்களில் மிகவும் அப்பட்டமாகக் கொப்பளிக்கும் அளவுக்கு படங்களைக் கொடுப்பவர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
இவர் தற்போது ‘டி கம்பனி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தாவூத் இப்ரஹிம் கஸ்காரின் டி கம்பெனி பற்றியதுதான் இத்திரைப்படம். தாவூத் இப்ரஹிம் 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தேடப்படும் முக்கியக் குற்றவாளி என்பது அனைவரும் அறிந்த கதையே. எல்லோருக்கும் தெரிந்த அந்தச் சம்பவத்தை நிழல் உலகத்தின் பின்னணியை சுவாரஸ்யம் குறையாமல் தத்ரூபமாகப் படமாக்கி ‘டி கம்பனி’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
கடந்த 2002-ல் ‘கம்பெனி’ என்றொரு திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கினார். இத்திரைப்படம் தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜன் பற்றி அரசல்புரசலாக வெளிவந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், பில் கேட்ஸ், திருபாய் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறும் தொட்டுச் செல்லப்படுகிறது.
ஆனால், இப்போது உருவாகியுள்ள ‘டி கம்பனி’ திரைப்படமானது கராச்சியில் உள்ள தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜனின் நெருங்கியக் கூட்டாளிகள் சொன்ன உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஸ்னீக் பீக் அண்மையில் வெளியாகி டிஜிட்டல் தளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஃப்ர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

Cinema News Tags:Ram Gopal Varma's

Post navigation

Previous Post: என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரண் மகன்
Next Post: இபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல்

Related Posts

kalyana-veedu-indiastarsnow.com கல்யாண வீடு சீரியல் தற்போது யூடியூப்பில் பார்க்க முடியாது Cinema News
சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது Cinema News
ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைவிமர்சனம் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைவிமர்சனம் Cinema News
தளபதி64 டபுள் டமாக்கா.. அட்டகாசமான அப்டேட்களால் தளபதி64 டபுள் டமாக்கா.. அட்டகாசமான அப்டேட்களால் Cinema News
ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம், சோனி லிவ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் ஸ்டாக்கர்ஸ் ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம், சோனி லிவ் நிறுவனத்துடன் இணைந்து “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” Cinema News
வம்பில் சிக்கிய ‘வாய்தா’... சாதி மோதலை உருவாக்குவதாக ஆட்சியரிடம் புகார்! வம்பில் சிக்கிய ‘வாய்தா’… சாதி மோதலை உருவாக்குவதாக ஆட்சியரிடம் புகார்! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme