Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பாடிகார்டை காதலித்து கரம்பிடித்த நடிகை!!!

Posted on January 29, 2021 By admin No Comments on பாடிகார்டை காதலித்து கரம்பிடித்த நடிகை!!!

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006-ம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும் பிரிந்தனர். 2014-ம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர். கடந்தாண்டு ‘பேட்மேன்’ உட்பட பல படங்களை தயாரித்த ஜான் பீட்டர்ஸ் (வயது 75) என்பவரை திருமணம் செய்தார். ஆனால் 12 நாட்களுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், தனது பாடிகார்ட் டான் ஹேஹர்ஸ்டை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது ரகசிய திருமணம் வான்கூவர் நகரில் அண்மையில் நடைபெற்றதாகவும், மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது பமீலாவின் ஆறாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடிகார்டை காதலித்து கரம்பிடித்த நடிகை-indiastarsnow.com (2)

பாடிகார்டை காதலித்து கரம்பிடித்த நடிகை-indiastarsnow.com (2)

Cinema News Tags:பாடிகார்டை காதலித்து கரம்பிடித்த நடிகை

Post navigation

Previous Post: Actor Samuthirakani sells ‘Kuchi Ice’ at Aelay UPCOMING FILM
Next Post: வீராபுரம் 220 திரைப்படத்தின் டிரெயிலர்

Related Posts

சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய் சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய் Cinema News
மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் தயாராகும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் தயாராகும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர் Cinema News
ZEE5 presents Fingertip Season 2 becomes an OTT blockbuster!!! ZEE5 presents Fingertip Season 2 becomes an OTT blockbuster!! Cinema News
'கஸ்டடி' திரைப்படம் மே 12, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும். ‘கஸ்டடி’ திரைப்படம் மே 12, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும். Cinema News
உறியடி' விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு Cinema News
அருண் விஜய்யின் ‘மாபியா’ ; சென்னை பின்னணியில் ஒரு போலீஸ் கதை அருண் விஜய்யின் ‘மாபியா’ ; சென்னை பின்னணியில் ஒரு போலீஸ் கதை Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme