Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி !

Posted on January 29, 2021January 29, 2021 By admin No Comments on ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி !

“குச்சி ஐஸ்” விற்கும் சமுத்திரகனி !

28 ஜனவரி 2021 : ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள “ஏலே” படத்தில் நடிகர் சமுத்திரகனி கிராமப்புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் “முத்துகுட்டி” எனும் கலகலப்பான மனிதராக நடிக்கிறார்.

படத்திற்கான விளம்பர முன்னோட்டமாக படத்தில் வரும் முதுகுட்டி கதாப்பாத்திர தோரணையில், மக்கள் புழங்கும் திருத்தணி முருகன் கோவில் முன்னால் ஏலே ஐஸ் வண்டியில் ( ஐஸ் நிறைந்த குளிரூட்டப்பட்ட வண்டி ) “குச்சி ஐஸ்” விற்பனை செய்துள்ளார். நகரம் முழுதும் முருக கடவுளின் தைப்பூச திருவிழா கொண்டாட்டத்தில் குழுமியிருக்க, மக்களுக்கு படத்தை பற்றிய அறிமுகத்தை கொண்டு செல்லும் பொருட்டு படக்குழு இவ்விடத்தை தேர்ந்தெடுத்து இந்த விளம்பரத்தினை செய்துள்ளது. சமுத்திரகனி ஐஸ் விற்பதை கண்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடிவிட்டனர். நடிகர் சமுத்திரகனி மக்களுடன் இயல்பாக உரையாடி மகிழ்ந்து, அவர்களுக்கு குச்சி ஐஸ் தந்தார். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்தார்.

இதனை தொடர்ந்து இதே மாதிரியான விளம்பர யுக்தியினை சிறுவாபுரி முருகன் கோவிலிலும் செய்தார் சமுத்திரகனி. அங்கும் ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தைப்பூச திருநாளில் துவங்கப்பட்ட “ஏலே” படத்தின் விளம்பர பணிகள் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி அடைந்ததில் சமுத்திரகனியும் ஏலே படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முன்னதாக படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் பொருட்டு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது தந்தையுடனான உறவு குறித்து பேசிய சிறு வீடியோ ரசிகர்களிடம் நேர்மறையான பாராட்டுக்களை பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

12 பிப்ரவரி 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தினை Y Not Studios நிறுவனமும் Reliance Entertainment நிறுவனமும் இணைந்து வழங்குகிறது. S.சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தை இணை தயாரிப்பு செய்துள்ளார் சக்ரவர்த்தி ராமசந்திரா.

படைப்பாளிகள் புஷ்கர் & காயத்திரி ( விக்ரம் வேதா புகழ் ) Wallwatcher Films சார்பில் முதல் படைப்பாக இப்படத்தினை கிரியேட்டிவ் புரடக்சன் செய்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

இசை – காபெர் வாசுகி, அருள் தேவ்

ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்

கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார்

படத்தொகுப்பு – ரேமண்ட் டெரிக் கிரஸ்டா, ஹலிதா சமீம்

சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்

VFX சூப்பரவைஸர் – லின்கின் லிவி

ஒலிப்பதிவு – S. அழகியகூத்தன்

ஒலி வடிவமைப்பு – G. சுரேன்

விளம்பர வடிவமைப்பு – கபிலன்

Please use the below link to download the images

https://fromsmash.com/AelayImages

Thanks & Regards
PRO-Suresh Chandra

ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி-indiastarsnow.com

ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி-indiastarsnow.com

ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி-indiastarsnow.com

ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி-indiastarsnow.com

ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி-indiastarsnow.com

ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி-indiastarsnow.com

Cinema News Tags:ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி-indiastarsnow.com

Post navigation

Previous Post: நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
Next Post: Actor Samuthirakani sells ‘Kuchi Ice’ at Aelay UPCOMING FILM

Related Posts

director Rakav Mirdath-indiastarsnow.com Director, Writer & Producer of the film “MIRUNA” – Rakav Mirdath Cinema News
ATHARVAA MURALI upcoming Film TRIGGER அதர்வா முரளி நடிக்கும் டிரிக்கர் ! Cinema News
பாரம்’ பற்றி மிஷ்கின் பேச்சு என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது பாரம்பாரம் பற்றி மிஷ்கின் பேச்சு என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது Cinema News
அந்தோணிதாசன் என் படத்தின் ஹீரோ! இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு! Cinema News
தலைவி - சென்னையில் நோ... மும்பையில் மட்டும் ஓகே தலைவி – சென்னையில் நோ… மும்பையில் மட்டும் ஓகே!!!! Cinema News
LIGER (Saala Crossbreed) On July 11th The Vijay Deverakonda in LIGER On July 11th Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme