Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Posted on January 28, 2021January 28, 2021 By admin No Comments on நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிநாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. இதில் ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்..

இந்தநிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிக்கும் ‘மாநாடு’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. அரசியல் கதைக்கள பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி.

ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதிவருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை. இவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது. இந் நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமட்சி..விரைவில் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் தெரிவிக்கப்படும்.

Cinema News Tags:நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Post navigation

Previous Post: தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்
Next Post: ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி !

Related Posts

Actress priya Bshankar latest pic-indiastarsnow.com Actress priya Bshankar latest pic Cinema News
2022 ஆம் ஆண்டுக்கான Mr Miss & Mrs. Tamilnadu அழகுப்போட்டி கோவையில் 2022 ஆம் ஆண்டுக்கான Mr Miss & Mrs. Tamilnadu அழகுப்போட்டி கோவையில் Cinema News
Mohanlal Sir's performance in Company all over again – Vivek Anand Oberoi ‘Dharavi Bank’, I went back to Mohanlal Sir’s performance in Company all over again – Vivek Anand Oberoi Cinema News
Amala Paul starrer “The Teacher” trends with heavy appreciation!! Cinema News
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் மீண்டும் மனைவி நடிக்க வந்ததார் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் மீண்டும் மனைவி நடிக்க வந்ததார் Cinema News
amala-paul-bar pic-www.indiastarsnow.com நடிகை அமலாபால் பப்பில் குடி போதையில் புகைப்படம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme