2021 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தமது அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக . கட்சியின் பெயர் ஆ.ஜ.க என்று கூறப்படுகிறது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக 25 ஆண்டுகள் காத்திருக்கவைத்த ரஜினி கூடுதலாக 25 நாட்கள் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.ஜினியின் அரசியல் ஆர்வத்துக்கு உயிர்ப்பை கொடுத்தது போல காணப்பட்டது.
2019ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடந்தபோது, ரஜினியின் அரசியல் நிலை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, யாருக்கும் ஆதரவு இல்லை. ரஜினி ரசிகர் மன்றம் தேர்தலில் போட்டியிடாது. 2021ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று மட்டும் ரஜினிகாந்த் கூறினார்.
இது குறித்து பிராதன கட்சியினரிடம் விவாதங்கள் எல்லாம் நடந்தன.
அப்படியிருக்க, தமிழக முதல்வர் எடப்பாடி, தமிழக அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், திமுக தலைவர்கள் என பலரும் “முதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு அது பற்றி பேசுகிறோம். கட்சி ஆரம்பிக்க அனைவருக்கும் உரிமை உண்டு,” என்று தெரிவித்தனர்.
குறிப்பாக ஜெயக்குமார் போன்ற அமைச்சர்கள் “குழந்தையே பிறக்காமல் பிள்ளைக்கு பேர் வைக்க கோருவது போல இந்த கேள்வி உள்ளது,” என்று கூறினார்கள்.
அப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினி டிசம்பர் 31-ல் கட்சி பெயரை அறிவிப்பதாக பேட்டி கொடுத்துள்ளார். ஆக 1996 -ல் அரசியல் எண்ணத்தை விதைத்த ரஜினிகாந்த் 25 ஆண்டுகள் ஓடி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை அவரா அறிவித்தாரா அல்லது அறிவிக்கபட வைத்தாரா என்று விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்க ரஜினி கட்சியின் பெயர் ஆ.ஜ.க என்று சொல்லப்படுகிறது.
அதாவது “ஆன்மீக ஜனதா கட்சியாம்”. ஓகே, ஓகே,,! பா.ஜ.க. வெர்ஸஸ் ஆ.ஜ.க.