சென்னை:
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். அவரை தமிழக முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் மற்றும் அதிமுக, பாஜக தொண்டர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து, சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார்.
இந்த அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்கத்திற்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தற்போது அமித்ஷா பேசிவருகிறார். இந்தியில் தனது நிகழ்ச்சி உரையை நிகழ்த்திவரும் அமித்ஷா, உலகின் தொன்மையான மொழியாம் தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்’ என தனது பேச்சை தொடங்கினார்.