Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் 'எக்கோ'வில் ஆசிஷ் வித்யார்த்தி!

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி!

Posted on November 21, 2020November 21, 2020 By admin No Comments on தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் 'எக்கோ'வில் ஆசிஷ் வித்யார்த்தி!

விக்ரம் நடித்த ‘தில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதை தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, விஜய், அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார். ரஜினிகாந்தின் சொந்தப்படமான பாபாவிலேயே வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவரை தேடிச்சென்றது.

கடந்த 2015ல் தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி, அதையடுத்து கடந்த ஐந்த வருடங்களாக தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். வாய்ப்புகள் தேடிவந்தாலும் கூட, ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென்பதால் பல படங்களை தவிர்த்துவிட்டார்.

இந்தநிலையில் ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த ‘எக்கோ’வில் இதுவரை நாம் காணாத ஆசிஷ் வித்யார்த்தியை பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். தில், தூள், கில்லி, தடம் படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு: கோபிநாத்

இசை: ஜான் பீட்டர்

எடிட்டிங்: சுதர்ஷன்

கலை: மைக்கேல் ராஜ்

நடனம்: ராதிகா

சண்டை பயிற்சி: டேஞ்சர் மணி

தயாரிப்பு நிர்வாகம் : BM சுந்தர்

ஒப்பனை: ராமச்சந்திரன்

ஆடை வடிவமைப்பு: பாரதி

பாடல்கள் : ஏக்நாத்

மக்கள் தொடர்பு: கே எஸ் கே செல்வா

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் 'எக்கோ'வில் ஆசிஷ் வித்யார்த்தி!

Cinema News Tags:தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் 'எக்கோ'வில் ஆசிஷ் வித்யார்த்தி!

Post navigation

Previous Post: எஸ்பிபி ஸ்டூடியோ என்ற பெயரில் டப்பிங் ஸ்டூடியோ
Next Post: அமித் ஷா சென்னையில் 68 ஆயிரம் கோடி ரூபாய் நல திட்டங்களுக்கு அடிக்கல்!!

Related Posts

AR Rahman’s daughter Khatija-indiastasnow.com FARISHTON First song by Khatija Rahman (daughter of AR Rahman Cinema News
என்ஜாய் ; விமர்சனம் Cinema News
Little Maestro Yuvan Shankar-indiastarnsow.com Little Maestro Yuvan Shankar Raja to rock Europe with grand concerts in Germany, France, UK Cinema News
KRG Studios acquires world theatrical rights of the Malayalam film “VALATTY – A Tale of Tails” except for the state of Kerala. KRG Studios acquires world theatrical rights of the Malayalam film “VALATTY – A Tale of Tails” except for the state of Kerala. Cinema News
சிபிராஜின் அடுத்த படத்தில் தளபதி பட நாயகி சிபிராஜின் அடுத்த படத்தில் தளபதி பட நாயகி Cinema News
தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் – அபர்நிதி நடிக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வை வெளியானது! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme