68 ஆயிரம் கோடி ரூபாய் நல திட்டங்களுக்கு அடிக்கல்! நடந்தே சென்ற அமித் ஷா மக்களை சந்தித்தார்!
அவர்கள் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார்.
தமிழக அரசு சார்பில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
மேலும், பாஜக வின் தமிழ்நாடு மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்றனர்.
விமான நிலையம் அருகே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித்ஷாவை உற்சாகமாக வரவேற்றனர்.
அமித்ஷா லீலா பேலஸ் ஓட்டல் செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கி அங்கு கூடியிருந்தவர்களுக்கு கையசைத்தவாறே நடந்து சென்றார்.
மாலையில் அரசு விழாவில் கலந்துக் கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்
முன்னதாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்குச் சென்ற அவர், அங்கு சிறிது ஓய்வெடுத்த பின்னர், தமிழக அரசு சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வந்தார். அங்கு அவரை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.
அமித்ஷா, மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமித்ஷாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக அளித்தனர்.
பின்னர் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
திட்டங்களின் விவரங்கள் வருமாறு,
* சென்னையில் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டப் பணிகள் துவக்கம்
* கோவை – அவினாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத் திட்டம்.
* திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டம்
* அமுல்லைவாயலில் ரூ.1,400 கோடியில் லிuதீமீ ஜீறீணீஸீt அமைக்கும் திட்டம்.
* கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் திட்டம்
* சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டம்
* காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் இறங்குதளம் அமைக்கும் திட்டம்
* வல்லூரில் ரூ.900 கோடியில் அமையவுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோலிய முனையம் என பல திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் அடிக்கல் நாட்டினார்.
இவையனைத்தும் காணொளிகாட்சி மூலம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!