தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரின் திடீர் என்ட்ரியை பார்த்து உற்சாகமடைந்த மற்ற போட்டியாளர்கள், அவரை கட்டியணைத்து வரவேற்றனர்.
தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் 4 துவக்க நிகழ்ச்சி அன்றே போட்டியாளராக உள்ளே வருவார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் அர்ச்சனா தொகுப்பாளராக பணிபுரியும் சேனல் நிர்வாகம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என தடை போட்டதால் அப்போது அவர் செல்லவில்லை. தற்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதால், தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.