Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக்-indiastarsnow.com

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக்

Posted on October 15, 2020 By admin No Comments on மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக்

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் !

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ( 2020 அக்டோபர் 9 ) வெளியான “மாறா” பட ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசம் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக்குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மனதை மயக்கும் கதையம்சத்துடன் மிக அழகான காதலை சொல்லும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓவியம் போல் அமைந்திருக்கிறது. முன்ணனி கதாபாத்திரங்கள் இருவரும், மனதை கவரும் தோற்றத்தில், போஸ்டரின் வேறு வேறு பக்கங்களில் இருக்க, போஸ்டரில் இருவேறு களங்கள் காட்சியளிக்கிறது. ஒரு கடற்கரை பகுதி மற்றும் ஒரு மலைப்பகுதி அதில் எதையோ தேடி நடக்கும் ஒரு பெண் என கதையின் மையத்தை அழகான ஓவியமாக கொண்டிருக்கிறது போஸ்டர்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற “கல்கி” படத்தினை உருவாக்கி புகழ்பெற்ற திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். எப்போதும் காதல் கதைகளில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை, உயிரை உருக்கும்படி இருக்கும். அந்த வகையில் “மாறா” படக்குழு இப்படத்தில் ஜிப்ரானின் இசை, இசைக்காதலர்களுக்கு பெரு விருந்தாக இருக்குமென உறுதியளிக்கிறது. திங் மியூஸிக் (Think Music) இசை உரிமையை பெற்றிருப்பதால் பட இசை கண்டிப்பாக பட்டிதொட்டியெங்கும் பரவி, பெரு வெற்றியை பெறும் என்பதில் ஐயமில்லை. இப்படத்தின் பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். படத்தொகுப்பை புவன் ஶ்ரீநிவாசன் செயதுள்ளார். படத்தின் போஸ்டரே படத்தின் விஷுவல்கள் அட்டகாசமாக இருக்கும் எனபதற்கு சான்று தருகிறது. ஒளிப்பதிவாளர்கள் கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் B மற்றும் கலை இயக்குனர் அஜயன் ஜலிசரி கண்டிப்பாக இப்படம் மூலம் பெரும் பாராட்டை பெறுவார்கள்.

தபஸ் நாயக் இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். ஸ்பலாட் ஸ்டூடியோ ( splat studio ) விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளனர். ஏக் லகானி மற்றும் ரெம்யா சுரேஷ் உடை வடிவமைப்பை செய்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கோபி பிரசன்னா செய்துள்ளார். SP cinemas லைன் புரடக்சன் பணியை செய்துள்ளனர். தயாரிப்பு ஒருங்கிணைப்பை ( Executive Producer) கோகுல்.K செய்துள்ளார்.

ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக்-indiastarsnow.comமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக்-indiastarsnow.com

Cinema News Tags:மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக்-indiastarsnow.com

Post navigation

Previous Post: தமிழ் பாரம்பரிய முறைப்படி பிறந்த நாளை கொண்டாடிய கட்டில் படக்குழு
Next Post: மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு!!!

Related Posts

sinam-indiastarsnow.com இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” திரைப்படம் ! Cinema News
இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது Cinema News
Wake up surgery இந்தியாவில் முதன்முறையாக 93 வயதான நோயாளிக்கு அவேக் கரோடிட் எண்டார்டெரெக்டோமி செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது Cinema News
தீ இவன் -indiastarsnow.com தீ இவன் படத்திற்ககாக பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக் Cinema News
நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார் Cinema News
'நானே வருவேன்' படத்தின் டீஸர் ரசிகர்களின் முன்னிலையில் வெளியீடு ‘நானே வருவேன்’ படத்தின் டீஸர் ரசிகர்களின் முன்னிலையில் வெளியீடு* Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme