Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

today engster work interview-indiastarsnow.com

இன்றைய இளைஞர்கள் வலை தேடுவதும் ஒருவகை வித்தை தான்

Posted on October 15, 2020 By admin No Comments on இன்றைய இளைஞர்கள் வலை தேடுவதும் ஒருவகை வித்தை தான்

இன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான்.
ஏனெனில், அந்த காலகட்டத்தில் வேலைகள் ஏராளமாக இருந்தன மற்றும் அதற்கான தகுதியான நபர்கள் மிகவும் குறைவு என்பது இவர்களின் எண்ணம். அந்த காலகட்டத்தில், வேலையைப் பெறுவதற்கான போட்டி, ஒரு நடைப் பயிற்சி போட்டியைப் போல்தான் இருந்தது. அதற்கு பிறகான நாட்களில், அந்த போட்டி ஒரு ஓட்டப் பந்தயமாக உருவெடுத்தது. ஆனால், அது இன்று, தடைகளைத் தாண்டி ஓடக்கூடிய ஒரு கடினமான போட்டியாக பரிணாமம் அடைந்துள்ளது.

மேலும், அன்றைய நாட்களில், பணிகளைத் தேடுவதென்பது, ஒருவரின் சொந்த மாவட்டம், மாநிலம் அல்லது அதிகபட்சமாக ஒரு நாட்டின் எல்லை என்ற அளவில் இருந்தது. ஆனால், இன்றைய தாராளமய பொருளாதார நிலை வேறு. உலகம் முழுவதும் வேலை தேடிக்கொள்ளும் வாய்ப்புகளும், வசதிகளும் பெருகியுள்ளன. தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கான உலகம் திறந்துவிடப்பட்டுள்ளது.
உங்கள் கல்லூரியின் placement cell -ஐ எந்த சமயத்திலும் இளக்காரமாக நினைத்துவிட வேண்டாம். அதேசமயத்தில், அவர்களே உங்களுக்கு, உங்களின் பெற்றோர் செய்வதுபோன்று பார்த்து பார்த்து செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. ஏனெனில், உங்களைப் போன்று அவர்கள் பல பேருக்கு உதவ வேண்டும்.

Placement cell -ன் அலுவலர்களை சந்தித்து, வேலைவாய்ப்புகள் பற்றி கேட்டறிந்து, உங்களின் விருப்பம் மற்றும் பணி தேர்வு குறித்து பேச வேண்டும்.

நீங்கள், பழைய மாணவர் சங்கத்திடம், பழைய மாணவர் பற்றிய பட்டியல் கேட்டு, அவர்களிடம் தொடர்பு கொள்ள முயலலாம். இதன்மூலம், உங்களின் ஆர்வத்தை அவர்கள் புரிந்துகொண்டு, அதனால் ஈர்க்கப்பட்டு, உங்களுக்கு உதவ நினைக்கலாம். ஆனால், placement cell, alumni association ஆகிய இரண்டு அம்சங்கள் மட்டுமே, உங்களுக்கான வேலை வாயப்புகளை 100% உறுதிசெய்துவிடும் என்று நினைக்கக்கூடாது.
உங்களின் ஆற்றல், திறமை மற்றும் நடைமுறை அறிவு போன்றவையே, இறுதி முடிவுகளைத் தரும் ஆற்றல் பெற்றவை என்பதை மறத்தலாகாது.
அதேபோல உங்களின் தொழில்துறை என்னவாக இருந்தாலும், அவற்றுக்கான தனி சங்கங்கள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பொறியாளர் என்று வைத்துக் கொண்டால், பொறியாளர் சங்கம் உண்டு. மேலாண்மை படிப்பை எடுத்துக்கொண்டால், அகில இந்திய மேலாண்மை சங்கம் மற்றும் பல உள்ளூர் சங்கங்களும் உண்டு.
இத்தகைய அனைத்து சங்கங்களும், தங்கள் துறை சார்ந்த செமினார்கள், வொர்க்ஷாப், மாநாடுகள் ஆகியவற்றை தங்களுக்கு பொருத்தமான ஏதேனும் கருத்தாக்கங்களின் அடிப்படையில் நடத்துகின்றன. மேலும், குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறை கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. எனவே, இதுபோன்ற அமைப்புகளில் உறுப்பினராகி, பொதுவாக மாதந்தோறும் ஏற்பாடு செய்யப்படும் லெக்சர் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது நன்மை பயக்கும்.
உங்களின் துறையில் அனுபவமிக்க நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களை சந்தித்து உரையாடுகையில், அவர்களிடமிருந்து, எந்தளவு விஷயங்களை வாங்க முடியுமோ, அந்தளவிற்கு வாங்கிவிட வேண்டும். மேலும், இந்த அமைப்புகளின் மூலமாக, பல நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்களின், ஏன், அந்த நிறுவன முதலாளியின் அறிமுகம்கூட கிடைக்கும். உங்கள் இருபது வயதுகளின் இறுதி கட்டத்தில் அல்லது முப்பது வயதுகளின் முதல் கட்டத்தில், ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து, உங்களின் திறமையை நிரூபிக்கலாம்.

today engster work interview-indiastarsnow.com

Genaral News Tags:today engster work interview-indiastarsnow.com, இன்றைய இளைஞர்கள் வலை தேடுவதும் ஒருவகை வித்தை தான்

Post navigation

Previous Post: சென்னை முழுவதும் மூன்று விதமாக மூன்று மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை
Next Post: பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்!

Related Posts

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம் Genaral News
KD Film Review KD Film Review Cinema News
NESAVU 2022 – Handloom Expo inaugurated at Central Cottage Industries Emporium, Chennai NESAVU 2022 – Handloom Expo inaugurated at Central Cottage Industries Emporium, Chennai Genaral News
Nikesha Patel gallery Genaral News
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார் மு.க.ஸ்டாலின் Genaral News
கந்தாரா திரைவிமர்சனம்.!! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme