Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ttv-indiastarsnow.com

அமமுக பொருளாளர் வெற்றிவேல், கொரோனா பாதிப்பால் காலமானார்

Posted on October 15, 2020 By admin No Comments on அமமுக பொருளாளர் வெற்றிவேல், கொரோனா பாதிப்பால் காலமானார்

அமமுக பொருளாளர் வெற்றிவேல், கொரோனா பாதிப்பால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை, மூப்பனார், ஜெ., சசிகலா- தினகரனிடம் உச்சகட்ட விசுவாசத்தின் அடையாளமாக இருந்தவர் வெற்றிவேல்! துயரம் தொண்டையை அடைக்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் எனது இனிய நண்பருமான வெற்றிவேல் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன். மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. ttv-indiastarsnow.comttv-indiastarsnow.com

ஜெயலலிதா, சசிகலாவின் பேரன்பைப் பெற்றவர். தியாகத்தின் பக்கம் என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர். என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன் என்று உறுதிபடச் சொல்லி இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். புனிதப் போரின் தளபதி துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப் போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர். வெற்றி என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிற போதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது. வெற்றிவேல் மறைவு அமமுகவுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்துக்கும் கழகத்துக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சியப் பயணத்தில் வெற்றிவேல் என்ற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Political News Tags:ttv-indiastarsnow.com

Post navigation

Previous Post: அப்துல் கலாம் வின் 89 வது பிறந்த தினத்தை முன்னிட்டு
Next Post: சென்னை முழுவதும் மூன்று விதமாக மூன்று மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை

Related Posts

ப.சிதம்பரத்திற்கு இன்று திகாரில் முதலிரவு! ஜெயில் நம்பர் 9..! வார்ட் நம்பர் 7 Political News
Priyanka Gandhi -www.indiastarsnow.com பா.ஜனதாவின் 100 நாள் கொண்டாட்டம் தேவைதானா பிரியங்கா கடுமையாக சாடியுள்ளார் Political News
தெலுங் கானா கவர்னர் சிறப்பாக செயல்படுவேன் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங் கானா கவர்னர் சிறப்பாக செயல்படுவேன் தமிழிசை சவுந்தரராஜன் Political News
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு Genaral News
ராஜஸ்தான் அரசு 1000 அபராததுடன் , இலவச ஹெல்மெட் வழங்க முடிவு ராஜஸ்தான் அரசு 1000 அபராததுடன் , இலவச ஹெல்மெட் வழங்க முடிவு Genaral News
பிரதமர் மோடி பதில் பிரதமர் மோடி பதில் Political News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme