சென்னை அடுத்த செமஞ்சேரியில் “அனைத்து மக்கள் சக்தி இயக்கம்” சார்பாக முன்னாள் குடியரசு தலைவர் ABJ அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த தினத்தை முன்னிட்டு உதவிகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர் பாஜக மாநில செயலாளர்
கலை மற்றும் கலாச்சார பிரிவின் உயர்திரு V.K. வெங்கடேசன் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்தவர் அப்துல் காலம் அவர்கள் அதே போல் இங்குள்ள மாணவர்கள் தங்களின் திறமையினை உயர்த்தி நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று இந்த தரணத்தில் ஒன்று கூடி சபதம் எடுப்போம் என்று அவர் விழாவில் பேசினார்.