அ.தி.மு.க வின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்சை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
அதே போல் சபாநாயகர் தனபாலையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அ.தி.மு.க வின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பி.ஜே.பி தலைவர் முருகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்மு கம், கொங்கு வேளாளர் கட்சித் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
வரும் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமையும் என்று தங்கள் அறிக்கையில் இந்த தலைவர்கள் கூறியுள்ளனர்.