Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தந்துவிட்டேன் என்னை-indiastarsnow.com

தந்துவிட்டேன் என்னை- ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்

Posted on October 7, 2020October 7, 2020 By admin No Comments on தந்துவிட்டேன் என்னை- ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்

“தந்துவிட்டேன் என்னை” – ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்

ஓடிடி தளத்தின் ட்ரெண்ட்செட்டரான ஜீ5 ஒவ்வொரு முறையும் தன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது ஜீ5 தனது தமிழ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அது ஜீ5-யின் மாபெரும் வெப் சீரிஸான “தந்துவிட்டேன் என்னை” பற்றிய அறிவிப்பு. இது மாபெரும் வெற்றிபெற்ற மராத்தி சீரிஸான ‘ஹோனர் சுன் மே ஹ்யா கர்ச்சி’-யின் ரீமேக் ஆகும். “தந்துவிட்டேன் என்னை” ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்காகவும், ஒரு குடும்பத்தில் எழும் இயல்பான மற்றும் நகைச்சுவையான சூழல்களின் கலவையாகவும் இருக்கும்.

“தந்துவிட்டேன் என்னை” சீரிஸில் அஷ்வின் மற்றும் ஹரிப்ரியா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல்வேறு பிரபல சீரியல்களில் பிரதான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள்.

பிரபல நடிகை சீதா இந்த வெப் சீரிஸில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தர்ஷா குப்தா, ரெதிகா ஸ்ரீனிவாஸ், ராகவி, துர்கா, நீபா இன்னும் பல்வேறு பிரபலமான நடிகர்களும் இந்த மாபெரும் படைப்பின் அங்கமாக உள்ளனர்.

இந்த வெப் சீரிஸை ராஜீவ் கே பிரசாத் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘சதுரன்’ என்ற ஒரு தமிழ் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

தயாரிப்பு & கிரியேட்டிவ் ஹெட் – V. முரளி ராமன்
எழுத்து – S. குமரேசன்.
ஒளிப்பதிவு – A. வினோத் பாரதி

“தந்துவிதந்துவிட்டேன் என்னை- ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்ட்டேன் என்னை” அக்டோபர் 23 அன்று ஜீ5 க்ளப்பில் அதிகாரபூர்வமாக வெளியாகிறது.
தந்துவிட்டேன் என்னை-indiastarsnow.com

Cinema News Tags:http://indiastarsnow.com/2020/10/07/thanthu-vitten-ennai-grand-web-series-from-zee5-club/, தந்துவிட்டேன் என்னை- ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்

Post navigation

Previous Post: Thanthu Vitten Ennai – Grand Web series from ZEE5 Club
Next Post: Next Post

Related Posts

Prime Video Screens an Exclusive Showcase of Upcoming Amazon Original Series, Vadhandhi – The Fable of Velonie, a Tamil Crime Thriller, at the 53rd International Film Festival of India (IFFI) Prime Video Screens an Exclusive Showcase of Upcoming Amazon Original Series, Vadhandhi – The Fable of Velonie, a Tamil Crime Thriller, at the 53rd International Film Festival of India (IFFI) Cinema News
Herewith i forward the press release pertaining to "Yashoda" Attractive first glimpse of Samantha’s Yashoda out now! Cinema News
IDIMUZHAKKAM GV Prakash UPCOMING MOVIE IDIMUZHAKKAM Cinema News
The annual general meeting of the All India Association of Chit Funds has been held today (30/09/2022) at Chennai. Cinema News
Darbar full Movie-www.indiastarsnow.com தர்பார் படத்தில் வெறிகொண்ட வேங்கையாக உடற்பயிற்சி செய்யும் ரஜினி Cinema News
ரஜினிகாந்தின் அண்ணனான சத்தியநாராயணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme