ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி களமிறங்கினர். மூன்றாவது ஓவரில் கொல்கத்தா அணி 3 பவுண்டரிகளை விளாசியது. நான்காவது ஓவரில் 2 பவுண்டரி அடித்தனர்.
ஐந்தாவது ஓவரின் 2வது ஷுப்மான் கில் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக ஆடிய திரிபாதி அரை சதமடித்தார். நிதிஷ் ரானா 9 ரன்னிலும், சுனில் நரைன் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா அணி 13 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் திரிபாதி 58 ரன்னுடனும், மார்கன் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
சென்னை அணி சார்பில் ஷர்மா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர் ஒரு விக்கெட்டும் எடுத்தார்.Rahul tripathi-indiastarsnow.com