Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

bharathiraja-cries-mgm-hospital-speaks-about-singer-spb-health-indiastarsnow.com

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி அறிக்கை – பாரதிராஜா.

Posted on September 26, 2020 By admin No Comments on பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி அறிக்கை – பாரதிராஜா.

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி அறிக்கை – பாரதிராஜா.

தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரம ணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்

ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம்
இருமல் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 45,000

அவர் பெற்ற தேசிய விருதுகள் ஆறு

இந்திய அரசின் உயரிய விரு துகளான பத்மஸ்ரீ பத்மபூஷன் போன்ற விருதுகளை பெற்ற இசை மேதை அவர்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் இருந்த மாபெரும் சொத்து அவருடைய மனிதநேயம்

எஸ் பி பாலசுப்பிரமணியத்தை எந்த இந்தியனும் ஒரு பாடகராக மட்டும் பார்த்ததில்லை

இந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிப்பில்லாத சொத்தாகத் தான் பார்த்தார்கள்

தமிழ் சினிமா உலகிற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட எஸ்பி பால சுப்பிரமணியம் தென்னிந்தியாவின் நான்கு பெருமைக்குரிய முதல்வர்கள் ஆன கலைஞர் எம்ஜிஆர் என் டி ராமாராவ் ஜெயலலிதா ஆகிய நால்வரோடும் இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்றவர்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் விடுத்துள்ள இரங்கல் செய்தி எஸ் பி பாலசுப்ரமணியம் எப்படிப்பட்ட உறவினை எல்லா தலைவர்களோடும் வைத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு

விலைமதிப்பில்லாத அந்த இசைக் கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்த முன்வந்துள்ள முதல்வர் அவர்களுக்கு கலை உலகின் சார்பில் இசை ரசிகர்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

நமது பாரதப் பிரதமரும் தமிழக தமிழக முதல்வரும் கலைத் துறையினர் மீது எந்த அளவு அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை மொத்த கலை உலகமும் நன்கு அறியும்

அதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தான் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு

தமிழ் திரையுலகின் சார்பாக

பாரதிராஜா

Cinema News Tags:bharathiraja-cries-mgm-hospital-speaks-about-singer-spb-health-indiastarsnow.com

Post navigation

Previous Post: திரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல் செய்தி.
Next Post: நடிகர் மோகன் எஸ்.பி.பி. சார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திருக்கிறேன்

Related Posts

Actor E. Ramadoss passed away due to heart Indian film directo & Actor E Ramadoss Dies Due To Heart Attack Cinema News
Big Boos Tamil 3 -www.indiastarsnow.com வனிதாவை அசிங்கப்படுத்திய கமல்! கவின் ஹேப்பி! Cinema News
தடயம் முதல் அத்தியாயம்' படத்தை-indiastarsnow.com தடயம் முதல் அத்தியாயம்’ படத்தை!!! Cinema News
நடிகர் விவேக் பெருமிதம் விருது கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருது Cinema News
Actor Siddhartha Shankar Actor Siddhartha Shankar Cinema News
ஜவான் படத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான் ஜவான் படத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme