Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகர் மோகன் எஸ்.பி.பி. சார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திருக்கிறேன்

நடிகர் மோகன் எஸ்.பி.பி. சார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திருக்கிறேன்

Posted on September 26, 2020September 26, 2020 By admin No Comments on நடிகர் மோகன் எஸ்.பி.பி. சார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திருக்கிறேன்

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். 45,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி நம்மை எல்லாம் மகிழ்த்தவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன். எஸ்பிபி சார் செய்த சாதனைகளை இனிமேல் யாராவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அவருடைய இசைப்பயணத்தில் எனக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி. முதல் பாடலிலிருந்து கடைசியாக பாடிய பாடல் வரை அவருடைய குரல் ப்ரெஷ் ஆகவே இருக்கும். அதே போல் அனைவருக்குமே எதிரிகள் என்று யாராவது இருப்பார்கள். எனக்கு தெரிந்தவரை எதிரிகளே இல்லாத மனிதர் எஸ்.பி.பி சார்.அது மிகவும் அபூர்வம். அந்தளவுக்கு அனைவருடனும் மிகவும் நட்பாக பழகக்கூடியவர்.
எண்பதுகளில் எல்லா ஹீரோக்களுக்கும் எஸ்.பி.பி சார் பாடல்களே அமைந்திருக்கும். என்னுடைய படங்களிலும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலின் மேஜிக் என்னவென்றால், எஸ்.பி.பி. சார் யாருக்குப் பாடினாலும் அவர்களே பாடுவது போல் இருக்கும். அப்படித்தான் எனக்கும் அமைந்தது. அவர் பாடிய பல பாடல்களுக்கு நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம்.
இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் அந்தக் குரல் மூலம் நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திருக்கிறேன்..
அவர் குடும்பத்தாருக்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

மோகன்
நடிகர்
சென்னை

Genaral News

Post navigation

Previous Post: பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி அறிக்கை – பாரதிராஜா.
Next Post: விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையறிந்து மனம் வேதனையடைந்தேன்

Related Posts

பெற்றோரின் ஒத்துழைப்போடுமதிய உணவில் அசத்தும் பள்ளி Genaral News
மோடி பதவியேற்பு விழாவை தவற விட்டனர் தலைவர்கள் !! Genaral News
கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு கண்டனம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் முத்தரசன் Genaral News
கலர்ஸ் தமிழில் உங்களை மகிழ்விக்க “போட்டிக்கு போட்டி கலர்ஸ் தமிழில் உங்களை மகிழ்விக்க போட்டிக்கு போட்டி Genaral News
மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா Genaral News
சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியீடு Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme