Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து

நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து.

Posted on September 7, 2020 By admin No Comments on நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து.

நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து.

ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 12% GST வரி. அதை விட கூடுதலாக தமிழக அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 8% கேளிக்கை (LBT) வரி.

மத்திய அரசு போட்டுவிட்டது GST வரி, பின்பு ஏன் மாநில அரசு போடுகிறது Extra வரி? பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எந்த பிற மாநிலங்களிலும் போடவில்லை வரி.

மத்திய அரசு சொல்வது ஒரே நாடு ஒரே வரி, ஆனால் இந்த தமிழ் நாடு மாநிலத்தில் மட்டும் ஏன் இரட்டை வரி? இந்தியாவில் தமிழ் நாடு என்ன தனி தீவா? எங்கள் திரையுலகை கொடுக்கிறார்களா காவா?

இதே கோடம்பாக்கத்திலுருந்து வந்து தமிழகத்தை 5 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக திரையுலகிற்கு கேளிக்கை வரியை செய்தார் ரத்து. அதே போல் கோடம்பாக்கத்திலுருந்து வந்து தமிழகத்தை 3 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் அம்மா அவர்களும் தமிழக அரசின் மூலமாக தமிழக திரையுலகிற்கு கேளிக்கை வரியை செய்தார் ரத்து.

மக்களுடைய நம்பிக்கை பெற்ற அந்த அம்மா அவர்கள் அமைத்து தந்த ஆட்சி, அதைதான் தற்போது வழிநடத்தி வருகிறார்கள். பேச்சுக்கு பேச்சு மூச்சுக்கு மூச்சு அம்மா அரசு என்று சொல்கிறீர்களே, அம்மா போடாத கேளிக்கை வரியை ஏன் தமிழக திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்?

சாதா காலங்களிலேயே சினிமா பெரும் பாடு படுகிறது, மேலும் இந்த கொரோனா காலத்தில் பெரும் பிரச்சனை. திரையரங்குகளை திறப்பதாக இருந்தால் 8% கேளிக்கை வரியை நீக்கிவிடுங்கள்.

எங்களால் இந்த இடர்களை தாங்க முடியவில்லை. உங்களது ஆட்சி காலம் முடிய போகிறது, எப்போது எங்கள் தமிழ் திரையுலகிற்கு பொழுது விடிய போகிறது?. பொறுக்க முடியாது இனி, பூனைக்கு யாராவது கட்டியே தீர வேண்டும் மணி!

இது கோடம்பாக்கத்து தாக்கத்தின் குரல், கோட்டையில் இருப்பவர்கள் இதை சாதாரணமாக போட வேண்டாம் எடை. இந்த வேதனைக்கெல்லாம் விரைவில் காலம் கூறும் விடை.

நன்றி,

டி.ராஜேந்தர் M.A.நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து

Cinema News Tags:நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து.

Post navigation

Previous Post: ராகுல் காந்தி மீண்டும் தலைவரா? : காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது!!
Next Post: தமிழின் பெரும் இயக்குநர்கள் இணைய, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “குட்டி லவ் ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம் !

Related Posts

vijay-sarkar-role-indiastrsnow விஜயின் 65 வது படம் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது Cinema News
மகாமுனி திரைப்படத்தின் விமர்சனம் மகாமுனி திரைப்படத்தின் விமர்சனம் Cinema News
அர்னால்ட் உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் நடிகர் ஆர்யா அர்னால்ட் உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் நடிகர் ஆர்யா Cinema News
ரஜினியும், மணிரத்னமும் என்னுடைய இன்ஸ்பிரேசன்* – *லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் Cinema News
இந்தப்படம் இளையதலைமுறையினரிடத்தில் கனவு காணவேண்டியதன் அவசியத்தை கற்றுத் தருகிறது.இயக்குநர் ரிஷிகா சர்மா Cinema News
இசைஞானி இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme