Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது

Posted on September 7, 2020 By admin No Comments on நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது

நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படுகிறது.

மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கியத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் பிரத்தியேகமாக அமேசான் பிரைம் வீடியோவில் தெலுங்கு படம் V-ஐ தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யலாம்.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.

நானி மற்றும் சுதீர் பாபு நடித்த தெலுங்கு த்ரில்லர் V, பார்வையாளர்களிடமிருந்து மிகுந்த அன்பைப் பெற்றுள்ளது. தனது 25- வது படத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி போலிஸ் கதாபாத்திரத்தில் சுதீர் பாபுவுடன் இணைந்து அதிரடியான சேஸிங்க் காட்சிகளில் மிரட்டியுள்ளதை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்த அதிகப்படியான அன்பின் காரணமாக, அமேசான் பிரைம் வீடியோ இப்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னட ஆடியோக்களுடன் படத்தை வெளியிட்டுள்ளது. அதிரடி-த்ரில்லர் இப்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் செய்ய கிடைக்கிறது.

எங்கள் படத்தை தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்வதன் மூலம் ரசிகர்களை வசதியாக தங்கள் வீடுகளில் இருந்தே சொந்த மொழிகளில் படத்தை அனுபவிக்க வைப்பதில் மிகுந்த சந்தோஷமடைகிறேன் என்று நானி இந்த முடிவைப் பற்றி பேசும் போது கூறினார். இது ரசிகர்களுக்கு நாங்கள் அளிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி. இந்த படத்தை நாங்கள் ரசித்து உருவாக்கியது போலவே ரசிகர்களும் இதை அனுபவித்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.”
” எப்போதுமே V என் மனதிற்கு நெருக்கமான புராஜெக்டாக இருக்கும் மற்றும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அதிகமாக இருக்கிறது”, தெலுங்கு பார்வையாளர்கள் எங்களை தங்களது அன்பினால் திக்குமுக்காட வைத்துவிட்டனர். மேலும் இந்த ரசிகர் வட்டத்தை அதிகமாக்க படத்தை தமிழ், கன்னடா மற்றும் மலையாள மொழிகளில் டப் செய்து வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. முடிந்தவரை நிறைய மக்களை இந்த அதிரடி திரைப்படம் அவர்களின் வீட்டிற்கே சென்று மகிழ்விக்கும் என நம்புகிறேன் என்று மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி கூறினார்.”

க்ரைம் எழுத்தாளர் மேல் காதல் கொள்ளும் காவலரின் வாழ்க்கை, சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அவனுடைய வாழ்க்கையில், கொலையாளி புதிர்களை கொண்டு வந்து அதை தீர்க்க சொல்லும் போது, வாழ்க்கையையே அது புரட்டிப்போடுவது மாதிரியான கதைக்களைத்த கொண்ட V- திரைப்படத்தை மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி எழுதி இயக்க இப்படத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த தெலுங்கு அதிரடி திரில்லர் திரைப்படம், சூப்பர் ஸ்டார் நானியின் 25 -வது படமாகவும், வில்லனாக நடிக்கும் முதல் படமாகவும் அமையப்போகிறது. இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 5, 2020 முதல் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் தெலுங்கு திரைப்படம் V- ஐ ஸ்ட்ரீம் செய்யலாம்.

ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் V-ம் சேருகிறது. அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளேபாக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ் மைசெல் போன்ற போன்றவற்றுடன் இந்திய படங்களான குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, பிரஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்பில் ப்ரைம் உறுப்பினர்கள் V -ஐ எங்கும், எந்த நேரத்திலும் பார்க்க முடியும். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ப்ரைம் வீடியோ இந்தியாவில் ப்ரைம் உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-க்கு கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.

Cinema News Tags:நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான 'V' இப்பொழுது

Post navigation

Previous Post: Actress Parvati looks Beautiful in blue stunning in these latest pictures
Next Post: Actress TanyaRavichandran Recent Photoshoot Pics

Related Posts

இயக்குனர் சீனு ராமசாமி மரியாதை நிமித்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்களை நேரில் சந்தித்து Cinema News
துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' படத்தின் புதிய அப்டேட் சீதா ராமம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு Cinema News
சிவி 2 துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் சிவி 2 Cinema News
விஜய் தேவரகொண்டா,இயக்குநர் பூரி ஜெகன்நாத் வரலாறு படைக்கும் கூட்டணி விஜய் தேவரகொண்டா,இயக்குநர் பூரி ஜெகன்நாத் வரலாறு படைக்கும் கூட்டணி Cinema News
லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் ! லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் ! Cinema News
ஓ மை கடவுளே படத்தின்? ஓ மை கடவுளே படத்தின்? Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme