Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ

அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை ! 

Posted on September 7, 2020 By admin No Comments on அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை ! 

அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை ! 

தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்பு துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உறவால் ஒன்றிணைந்துள்துள்ளார்கள். அதர்வா முரளியின் இளைய சகோதரர் ஆகாஷ்,  தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ மகள் இயக்குநர் சினேகா ப்ரிட்டோ இருவரும் திருமண வாழ்வில் இணைந்துள்ளார்கள்.  இவர்களின் திருமண விழா, குடும்ப உறவுகள், நெருங்கிய நண்பர்கள்  மட்டும் பங்கேற்க, சென்னை கிழக்குகடற்கரை சாலையில், திருக்கழுகுன்றத்தில் உள்ள தனியார் வாளகத்தில் ஆகஸ்ட் 24, 2020 அன்று மாலை 3 மணி முதல் 4 மணி வாக்கிலாக இனிதே அரங்கேறியது. கொரோனா முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் விழிப்புணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டு, இவ்விழா இனிதே கொண்டாடப்பட்டது.

இந்த நல்ல செய்தி குறித்து அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ இருவரும் இணைந்து கூறியதாவது…

நாங்கள் மனம் நிறைந்த மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் இல்ல திருமண நிகழ்வு அனைவர் ஆசிர்வாதத்தில் நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள் சூழ, இனிதாக நடந்து முடிந்தது.  இந்நிகழ்வை இன்னும் பிரமாண்டமாக காலத்தின் மறக்க முடியாத, இரு குடும்பங்களின் கொண்டாட்ட  நிகழ்வாக உங்கள் எல்லோரையும் அழைத்து நடத்தவே ஆசைப்பட்டோம். ஆனால் தற்போதைய உலக சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்ப சொந்தங்கள் மட்டுமே, பங்கேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் மிக விரைவில் நிலமை சரியானவுடனே திரையுலக நண்பர்கள், ஊடக  நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரமாண்ட வரவேற்பு விழா செய்திட திட்டமிட்டுள்ளோம். திருமண பந்தத்தில் இணைந்து பயணிக்கும் எங்கள் இல்ல  வாரிசுகளை அனைவரும் ஆசிர்வதிக்க வேண்டுகிறோம். நன்றி.அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ

Cinema News Tags:அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ

Post navigation

Previous Post: தமிழின் பெரும் இயக்குநர்கள் இணைய, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “குட்டி லவ் ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம் !
Next Post: பிக் பாஸ் – 4 விரைவில் புரோமோ

Related Posts

பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது Cinema News
“VELS University International Women’s day celebrations” Cinema News
அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே...! அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே…! Cinema News
நடிகர் பிரபாஸ் திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Cinema News
Brinda Master to Direct - THUGS பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’ Cinema News
bharathiraja-cries-mgm-hospital-speaks-about-singer-spb-health-indiastarsnow.com பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி அறிக்கை – பாரதிராஜா. Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme