Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Raja Bheema Marking the special occasion

ராஜ பீமா படத்தின் இறுதிகட்ட பணிகளில்!!

Posted on August 23, 2020August 23, 2020 By admin No Comments on ராஜ பீமா படத்தின் இறுதிகட்ட பணிகளில்!!

இறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா” !

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவருக்கும் “ராஜ பீமா” படக்குழு வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளனர்.Raja Bheema      Marking the special occasion

இயக்குநர் நரேஷ் சம்பத் இது பற்றி கூறியதாவது…
“ராஜ பீமா” படக்குழு சார்பில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம். இந்த திருநாள் விழா எங்கள் படத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான் எங்கள் படத்தில் மிகமுக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார். உலகமே முடக்கத்தில் இருக்கும் இந்த கொடிய நேரத்தில் அனைவரும் பாதுகாப்புடனும் நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கக் கேட்டுக்கொள்கிறோம். விரைவில் நம் வாழ்வு பழையபடியே திரும்பும் என நம்புகிறோம். தற்போது எங்கள் படத்தின் 95 சதவீத போஸ்ட் புரடக்‌ஷன் முடித்துவிட்டோம். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விரைவில் முடித்துவிடுவோம். தியேட்டர்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தவுடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ராஜ பீமா படத்தை சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரிக்க இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். ஆரவ் மற்றும் அஷிமா நர்வால் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். நாசர், K S ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஷயாஜி ஷிண்டே, பாகுபலி பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சைமன் K கிங் இசையமைக்க, S R சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார்.

ராஜ பீமா படத்தின் இறுதிகட்ட பணிகளில்!!ராஜ பீமா படத்தின் இறுதிகட்ட பணிகளில்!!ராஜ பீமா படத்தின் இறுதிகட்ட பணிகளில்!!-indiastarsnow.com

Cinema News Tags:Raja Bheema Marking the special occasion, ராஜ பீமா படத்தின் இறுதிகட்ட பணிகளில்!!

Post navigation

Previous Post: போனி கபூரின் பே வியூ ப்ரொஜெக்ட் எல் எல் பி , உதயநிதி ஸ்டாலின்,இயக்குனர் அருண் ராஜா காமராஜா இணைந்து வழங்கும் படம்=இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற “ஆர்டிக்கல் 15′ படத்தின் ரீ மேக்.
Next Post: Vanjagar Ulagam Director Manoj Beeda gets hitched to Actress Shalini Vadnikatti

Related Posts

ரஜினியும், மணிரத்னமும் என்னுடைய இன்ஸ்பிரேசன்* – *லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் Cinema News
Prasanth Varma’s Pan India Movie HANU-MAN Teaser Clocks 50 M+ Views, 1M+ Likes Cinema News
தி கிரே மேன் - பார்வையாளர்களை மயக்கத்தில் மூழ்கடிக்கும் ஒரு அதிசய உலகம் - ரூஷோ பிரதர்ஸ் தி கிரே மேன் – பார்வையாளர்களை மயக்கத்தில் மூழ்கடிக்கும் ஒரு அதிசய உலகம் – ரூஷோ பிரதர்ஸ் Cinema News
டி3 திரை விமர்சனம் டி3 திரை விமர்சனம் Cinema News
SRK Universe Celebrates 10 Years of Chennai Express with Special Screening Across 52 Cities – Counting Jawan’s Month-Long Extravaganza!* Cinema News
நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை ❗ Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme