டெல்லி : காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால தலைவராக நீடிக்குமாறு சோனியா காந்தியை, காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தலாம் என கூறப்படுகிறது. அதை அவர் ஏற்க மறுத்தால், ராகுல் அல்லது பிரியங்காவுக்கு, உறுப்பினர்கள் ஆதரவளிக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமை குறித்து பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நாளை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
