மதுரை : பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்பதே தனது கருத்து என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கக் கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பதவியா ? வளர்ச்சியா என முதல்வர், துணை முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் என்று அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் இருமொழி கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்றும் தமிழகத்தில் தடை இல்லாமல் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
