Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Tamil-Nadu-Curfew-e-Pass-indiastarsnow.com

தமிழகத்தில் இ பாஸ் ரத்து… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Posted on August 23, 2020 By admin No Comments on தமிழகத்தில் இ பாஸ் ரத்து… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. அவற்றில் ஒன்று இபாஸ் வாங்கி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லலாம் என்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு மாநிலத்திற்குள் செல்லவும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் தேவையில்லை என அறிவித்து இருந்தது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மாவட்டங்களுக்குள் செல்லவும் மாநிலத்தில் இருந்து வெளியே செல்லவும் இபாஸ் கட்டாயம் என்று அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிக்கலை அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களுக்குள்ளும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவை ஏற்று புதுச்சேரியில் இன்று முதல் இபாஸ் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லவும் இபாஸ் தேவையில்லை என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். அதே போல் பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இபாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ளார்.
எனவே அடுத்து தமிழகத்திலும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அதிக வாப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை ஊரடங்கு குறித்த செய்திகளை வெளியிடும் போது இ பாஸ் ரத்தாகிறது என அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Tamil-Nadu-Curfew-e-Pass-indiastarsnow.com

Genaral News Tags:Tamil-Nadu-Curfew-e-Pass-indiastarsnow.com

Post navigation

Previous Post: கொரோனா நோயாளிகளை கண்டறிய தினமும் 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
Next Post: தமிழகம் முழுவதும் கடந்த 151 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 9,85,415 பேர் கைது!!

Related Posts

MIA BY TANISHQ STRENGTHENS ITS MARKET PRESENCE IN CHENNAI WITH A STRATEGIC ROLLOUT OF 4 NEW STORES MIA BY TANISHQ STRENGTHENS ITS MARKET PRESENCE IN CHENNAI WITH A STRATEGIC ROLLOUT OF 4 NEW STORES Genaral News
சாத்தான்குளம் இருவரின் பின்புறத்தில் இருந்து ரத்தம் புதிய ஆதாரங்கள் சாத்தான்குளம் இருவரின் பின்புறத்தில் இருந்து ரத்தம் புதிய ஆதாரங்கள் Genaral News
Actress Prayaga Martin I am so much eagerly to waiting to experiment with different roles out here. Genaral News
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது Genaral News
Prepare for a Spooky Halloween Weekend for Kids at Phoenix Marketcity Genaral News
விறுவிறுப்பான ரிவெஞ்ச் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள ‘மகசர்’ MAGASAR – A Riveting Edge-of-Seat Revenge Thriller Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme