Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விஜய் ஆன்டனியின் 'பிச்சைக்காரன் 2-indiastarsnow.com

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2

Posted on July 25, 2020 By admin No Comments on விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’!

நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும்.

இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, “எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். ‘பிச்சைக்காரன்’ படத்துக்காக இயக்குநர் சசி அவர்களுக்குத்தான் நான் முதலில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். காரணம், என்றென்றும் மறக்க முடியாத வெற்றிப்படமாக எங்கள் நிறுவனத்துக்கு அமைந்த படம் ‘பிச்சைக்காரன்’. சசி அந்தப் படத்துக்காக மிகச் சிறப்பாகப் பணியாற்றி மகத்தான வெற்றியை ஈட்டித் தந்ததுதான், இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இரண்டாம் பாகத்தைத் தொடர காரணமாக அமைந்திருக்கிறது.
விமர்சன ரீதியில் பெரும் பாராட்டைப் பெற்றதுடன் தேசிய விருதையும் வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி, பிச்சைக்காரன் 2 படத்தில் இணைந்திருப்பது எங்கள் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. மகத்தான படைப்பாக அமைந்த பாரம் மட்டுமின்றி, அவர் உருவாக்கிய ‘கங்கூபாய்’ மற்றும் ‘பெர்ஸி’ ஆகிய படங்களும் வித்தியாசமான உருவாக்கத்திற்காக வெகுவாக பாரட்டப்பட்ட படங்களாகும். விஜய் ஆன்டனி நடித்த படங்களிலேயே மிக அதிக பொருட் செலவில் தயாராகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கதைக் களம் இதுபோன்ற பொருட் செலவு மூலம், படத்தின் மதிப்பைக் கூட்டுவதாக அமைந்திருக்கிறது” என்று கூறினார் பாத்திமா விஜய் ஆன்டனி.

விஜய் ஆன்டனியைப் பொறுத்தவரையில் இந்தப் படத்துக்காக இப்போதே தயாராகத் தொடங்கி விட்டார். முதற்கட்டமாக பத்து முதல் பதினைந்து கிலோவரை உடல் எடையைக் குறைக்கும் முனைப்புடன் கடும் உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கதாநாயகி வேடத்தில் நடிக்க முன்னணி நாயகிகள் சிலருடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வரும், கலை இயக்குநராக ஆறுமுக ஸ்வாமியும், சண்டைப் பயிற்சியாளராக மகேஷ் மாத்யூவும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் பணியாற்ற ஒப்பந்தமாகியிருக்கின்றனர்.விஜய் ஆன்டனியின் 'பிச்சைக்காரன் 2

Cinema News Tags:விஜய் ஆன்டனியின் 'பிச்சைக்காரன் 2

Post navigation

Previous Post: actress Amala Paul New dashing photoshoot pictures
Next Post: புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்

Related Posts

தளபதி அட்லியின் இயக்கத்தில் வரும் தீபாவளி அன்று பிகில் படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெறித்தனம் பாடல் வெளிவந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனலில் 1 மில்லியன் லைக்கை அள்ளி குவித்தது. இதனால் கடுப்பான தல ரசிகர்கள் இந்த 1 மில்லியன் லைக்கும் காசு கொடுத்து பெறப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அதனை கொண்டு வந்துள்ளனர். இதனால் இணையதளத்தில் தல தளபதி ரசிகர்கள் இடையே பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது. என்னதான் இருந்தாலும் வெறித்தனம் லிரிகல் வீடியோவிற்கு மக்களின் ஆதரவு ரசிகர்களின் ஆதரவு உலக அளவில் இருப்பதால் இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இணையதளத்தில் ‘வெறித்தனமாக’ அடித்துக் கொள்ளும் தல தளபதி ரசிகர்களுக்கு.. என்ன காரணம் தெரியுமா? Cinema News
புராணங்களுக்கான சிறந்த திரைப்படம் எனும் விருதை வென்ற ‘மாயோன்’ Maayon wins an award at Toronto International Film Festival Cinema News
புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்-indiastarsnow.com புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள் Cinema News
V House Production Suresh Kamatchi to release Ameer’s ‘Uyir Thamizhukku’ Cinema News
நடிகை ரம்யா கிருஷ்ணனை பார்த்து பொறாமைப்படும் நடிகை குஷ்பு நடிகை ரம்யா கிருஷ்ணனை பார்த்து பொறாமைப்படும் நடிகை குஷ்பு Cinema News
பூதமங்கலம் போஸ்ட் இரு நண்பர்களின் கதை ” பூதமங்கலம் போஸ்ட்” Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme