Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Varalakshmi-to-play-as-blind-Girl-in-her-Rajaparvai Film-indiastarsnow.com

வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..!

Posted on July 8, 2020 By admin No Comments on வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..!

‘ராஜபார்வை’ பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..!

ராஜபார்வை படத்தின் உரிமையை இரண்டு பேருக்கு விற்று பட தயாரிப்பாளர் மோசடி..!

வரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..!

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜபார்வை’. இந்தப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் மலேசிய பாண்டியன் என்பவர் இந்த பாபுரெட்டியிடம் ராஜபார்வை படத்தின் வெளிநாட்டு உரிமையை 2௦ லட்ச ரூபாய்க்கு விலைபேசி முடித்து அதற்காக பத்து லட்ச ரூபாயும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டார்.

ஆனால் கடந்த வருடம் ஜூன் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறிய பாபுரெட்டி படத்தை முடிக்காமல் இழுத்தடிக்கவே, ஒருகட்டத்தில் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டுள்ளார் மலேசியா பாண்டியன்.. ஆனால் பாபுரெட்டி பணத்தை திருப்பித்தராமல் முரண்டு பிடிக்கவே, விஷயம் தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் அருண்பாண்டியன் கவனத்திற்கு சென்றது. அதையடுத்து விரைவில் பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக அவர் முன்னிலையில் உறுதி அளித்தார் பாபுரெட்டி.

இந்த சமயத்தில் கொரோனா தாக்கம் அதன் காரணமாக, ஊரடங்கு என நிலைமையே மாறிவிட்டது. இதை பயன்படுத்தி பாபு ரெட்டி தன்னிடமிருந்த ‘ராஜபார்வை படத்தின் மொத்த உரிமையையும் விஜயராஜேஷ் ரங்கப்பா என்பவருக்கு விற்றுவிட்டார்.. இந்த விஜயராஜேஷ் ரங்கப்பா உடனே இந்தப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபலமான ஏபி இன்டர்நேஷனல் என்கிற நிறுவனத்துக்கு 17 லட்ச ரூபாய்க்கு விலைபேசி விற்றுவிட்டார். படத்தை இன்னொருவருக்கு விற்கும்போது ஏற்கனவே வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டதை கூறியிருக்க வேண்டும் அல்லது மலேசிய பாண்டியனுக்கு அவரது அட்வான்ஸ் தொகையை திருப்பித்திந்திருக்க வேண்டும்..

ஆனால் அப்படி செய்யவில்லை.. அதுமட்டுமல்ல, மலேசிய பாண்டியனுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ராஜபார்வை படத்தை OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவதற்கான முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது. படத்தை தயாரிக்க ஆரம்பித்த தயாரிப்பாளர் முதல் இப்போது வாங்கியுள்ள தயாரிப்பாளர் வரை இந்த மூன்று பேரும் இயக்குனர் ஜேகேவும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என்பது மலேசியா பாண்டியனுக்கு தெரிவந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவர்கள் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் மலேசியா பாண்டியன்.. மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இதுபோன்று வெளிநாட்டு உரிமைகளை விற்கும் நபர்கள் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களும் தகுந்த கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் மலேசியா பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.Varalakshmi-to-play-as-blind-Girl-in-her-Rajaparvai Film-indiastarsnow.comVaralakshmi-to-play-as-blind-Girl-in-her-Rajaparvai Film-indiastarsnow.comVaralakshmi-to-play-as-blind-Girl-in-her-Rajaparvai Film-indiastarsnow.com

Cinema News Tags:Varalakshmi-to-play-as-blind-Girl-in-her-Rajaparvai Film-indiastarsnow.com, வரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..!

Post navigation

Previous Post: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார்.
Next Post: ரகுல்பிரீத் சிங் சம்பளத்தை பாதியாக குறைக்க !!!

Related Posts

அவதார்-2 திரை விமர்சனம் அவதார்-2 திரை விமர்சனம் Cinema News
தீ இவன் -indiastarsnow.com தீ இவன் படத்திற்ககாக பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக் Cinema News
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் மீண்டும் மனைவி நடிக்க வந்ததார் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் மீண்டும் மனைவி நடிக்க வந்ததார் Cinema News
லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு ! லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு ! Cinema News
பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்” நெகிழ்ந்த ‘பனாரஸ்’பட இயக்குநர் Cinema News
நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார் நடிகர் ராம் பொத்தினேனி, நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme