Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார்.

Posted on July 8, 2020 By admin No Comments on மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார்.

” செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”.

அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.
டெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை அரசியல் களம் மூலம் தொடங்குகிறார். எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். எதிலும் புதுமை விரும்பியான பார்த்திபன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தின் இணைகிறது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றிக் கோட்டைத் தொட தயாராகி வருகிறார்கள்.
இதில் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது.
‘துக்ளக் தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ் லலித் குமார் ‘துக்ளக் தர்பார்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார்

Cinema News Tags:விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார்

Post navigation

Previous Post: தயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் ‘பிதா’
Next Post: வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..!

Related Posts

rajinikanth-indiastarsnow.com நடிகர் ரஜினிகாந்த் சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் – குடும்பத்தினருக்கு ஆறுதல் Cinema News
NC 22 titled Custody, raging first look of Naga Chaitanya out now Cinema News
இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை நடிகர் கிருஷ்ணா அவர்கள் திறந்து வைத்துள்ளார் Cinema News
டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு! Cinema News
ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்: பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா* ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்: பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா* Cinema News
தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா ! தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா ! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme