Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை-indiastarsnow.com

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

Posted on July 7, 2020 By admin No Comments on ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு பலரது பாராட்டை பெற்றார். தற்போது ராஜாக்கூரில் வளர்க்கும் “கரூப்பன்” என்ற காளையுடன் இருக்கும் படங்களை “ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா!!” என்ற வாசகத்துடன் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

“கருப்பன் காளை இது வரை 40க்கும் மேற்ப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர்கள் இது வரையில் கருப்பன் காளையை எவரும் பிடித்ததில்லை, ஏன் தொட்டதுகூட இல்லை. பங்கெற்ற அனைத்து போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளது எங்கள் “கருப்பன்”.

வென்ற பரிசுகளை எங்கள் கருப்பன் காளையை பராமரிப்பவர்களுக்கும், ஊர் மக்கள் வீட்டில் எதேனும் காதுகுத்து அல்லது திருமண விழா போன்ற விசேஷங்கள் நடக்கையில் அவர்களுக்கும் கருப்பன் காளை சார்பாக அளித்து விடுவோம். தற்போது எங்கள் கருப்பன் காளையை எனது தம்பி வினோத் பரமாரித்து வருகிறார்” என்றார் நடிகர் சூரி

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை-indiastarsnow.com

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை-indiastarsnow.com

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை-indiastarsnow.com
ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை-indiastarsnow.com

Cinema News Tags:ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை-indiastarsnow.com

Post navigation

Previous Post: புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா
Next Post: ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்

Related Posts

DISNEY+ HOTSTAR TO PREMIERE* VIJAY SETHUPATHI-NAYANTHARA-SAMANTHA STARRER “KAATHUVAAKULA RENDU KADHAL” FROM MAY 27, 2022, ONWARDS டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தினை மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக வெளியிடுகிறது Cinema News
சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அசுரன் படத்தை பார்த்து பிரமிப்புடன் பதிவிட்ட தெலுங்கு சூப்பர்ஸ்டார் Cinema News
அருள்நிதி நடிக்கும் டைரி பட டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அருள்நிதி நடிக்கும் டைரி பட டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Cinema News
சபரிமலையில் நடைபெற்ற யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம் PO’ படத்தின் பூஜை சபரிமலையில் ‘சன்னிதானம் PO’ படத்தை கிளாப் அடித்து துவங்கிவைத்த விக்னேஷ் சிவன் Cinema News
Prime Video to Premiere the Much-Awaited Crime Thriller, Raj & DK’s Farzi, Starring Shahid Kapoor and Makkal Selvan Vijay Sethupathi, on 10 February Cinema News
காரி திரை விமர்சனம் காரி திரை விமர்சனம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme