Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது - நடிகர் இனிகோ பிரபாகர்

ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்

Posted on July 7, 2020 By admin No Comments on ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்

ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்

ஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர்.

சென்னை 28, சென்னை 28 II, பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே நகர் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது. அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

நடிகர் இனிகோ பிரபாகர் கூறுகையில், “நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதிலும் ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் எனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்தேன். இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது.

தற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்கின்றேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

‘ஆர்.கே நகர் படத்தில் கிடைத்தது போன்ற சவாலான வில்லன் கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பீர்களா?’ என எனது ரசிகர்கள் பலர் என சமூக வலைதளத்தில் கேட்டிருந்தனர். அதற்கு ‘கண்டிப்பாக செய்வேன்’ என்று பதலளித்திருந்தேன். அவர்கள் கூறியது போன்றே அப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது - நடிகர் இனிகோ பிரபாகர்

Cinema News Tags:ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது - நடிகர் இனிகோ பிரபாகர்

Post navigation

Previous Post: ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை
Next Post: தடயம் முதல் அத்தியாயம்’ படத்தை!!!

Related Posts

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்! Cinema News
சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது Cinema News
ஓட்டல் சப்ளையரான பிரபல நடிகர் Cinema News
Jackie-Chan-pretended-to-be-hurt-to-be-close-to_indiastarsnow.com என்டர் த ட்ராகன் படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில் Cinema News
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் எம்.ஜி.ஆர். மகன் பொன்ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். மகனாக மாறிய சசிகுமார் Cinema News
சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழா – கபிலன்வைரமுத்து நூல்கள் தேர்வு Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme