Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மர்மம்... கொலை... திகில் - மிரட்டும் IPC 376 ட்ரைலர்!

மர்மம்… கொலை… திகில் – மிரட்டும் IPC 376 ட்ரைலர்!

Posted on July 4, 2020 By admin No Comments on மர்மம்… கொலை… திகில் – மிரட்டும் IPC 376 ட்ரைலர்!

மர்மம்… கொலை… திகில் – மிரட்டும் IPC 376 ட்ரைலர்!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.

ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். சிபிராஜ் நடிப்பில் உருவான கபடதாரி படத்திலும் நடித்துள்ளார் நந்திதா.

இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என மொத்த மசாலாக்களை அடங்கிய இப்படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ளார்.
ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வருகிறது.

லாக்டவுனுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஆனால் சமீபத்தில் தான் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் முடிந்தது. தற்ப்போது இப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. நந்திதாவின் திரைப்பயணத்தில் இந்த படம் பெரும் பங்காற்றும் என நிச்சயம் கூறலாம். இதோ அந்த ட்ரைலர் வீடியோ.மர்மம்... கொலை... திகில் - மிரட்டும் IPC 376 ட்ரைலர்!

Cinema News Tags:மர்மம்... கொலை... திகில் - மிரட்டும் IPC 376 ட்ரைலர்!

Post navigation

Previous Post: Actor Vijjith got hitched to Vishva Vinothini wedding Gallery
Next Post: விக்ரம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? கார்த்திக் சுப்பராஜ் !!

Related Posts

அஜீத் ரசிகர்களைக் குஷிப்படுத்திய விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் அஜீத் ரசிகர்களைக் குஷிப்படுத்திய விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் Cinema News
ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும் ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும் Cinema News
கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ''பட்டத்து அரசன்'' திரைப்படம் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ”பட்டத்து அரசன்” திரைப்படம் Cinema News
#BiggBossTamil3 பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இரண்டு பிரபலங்கள் Cinema News
priyanka chopra-indiastarsnow.com சத்தான்குளம் சம்பவத்திற்கு ப்ரியங்கா சோப்ரா கண்டனம்! Cinema News
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் சீமான் அளித்த பேட்டி Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme