நடிகர் தனுஷின் 2வது படமான காதல் கொண்டேன் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அண்ணனும், காதல் கொண்டேன் படத்தின் இயக்குனருமான செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில், அண்ணன் செல்வராகவனுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன், என அவர் கூறியுள்ளார்.
அண்ணன் செல்வராகவன் மீது தனுஷுக்கு எப்போதுமே மரியாதை அதிகம். என் அண்ணன் இல்லை என்றால் இன்று நான் இந்த இடத்தில் இல்லை, என பலமுறை பல மேடைகளில் தனுஷ் கூறியிருக்கிறார். தற்போது வெளியிட்டுள்ள பதிவின் மூலம் தனுஷ் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனுஷின் முதல் படம் துள்ளுவதோ இளமை. அந்த படத்தை செல்வராகவன் தான் இயக்கினார் என்றாலும், சில காரணங்களுக்காக தந்தை கஸ்தூரிராஜாவை தான் இயக்குனராக வெளிக்காட்டிக் கொண்டனர். படம் வெற்றி பெற்ற பிறகு தான் செல்வராகவன் பெயர் வெளியே தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செல்வராகவன் இயக்கிய படம் தான் காதல் கொண்டேன். வினோத் எனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து அசர வைத்தார் தனுஷ். இந்த படம் தான்