சென்னையில் ஊரடங்கு தளர்வுகள்:
சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.
டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்.
உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
ஏற்கெனவே காலை 6 மணி வரை இரவு 8 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது-மறு உத்தரவு வரும்வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும்.
தொலைபேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி.
வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம்.