இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
திண்டுக்கல் பழனி அருகே வண்டி வாய்க்காலில் வசிக்கும் ஒருவருக்கு கொரானா தொற்று என தகவல்.
அவர் கோவை ESI மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனை காரணமாக ஒரு வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
அவர் இன்னும் கோவை மருத்துவமனையில்,சிகிச்சையில் இருக்கிறார். மேலும் அவர் சொந்த ஊரான வண்டி வாய்க்காலில் அவர் வசிக்கும் ஏரியா கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப் பட்டுள்ளது.
✅செங்கல்பட்டு:
தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் உயிரிழப்பு.
முதியவரின் உடல்நலம் குறித்து அறியாமலேயே தனிமைப்படுத்தியதாக புகார் .
முதியவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லையென குற்றச்சாட்டு
சென்னை
✅சென்னை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் உருவப்படத்திற்கு மலர் தூவி பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்
திண்டுக்கல்
✅திண்டுக்கல் நத்தம் ஊராட்சி ஒன்றிய(யூனியன்) அலுவலகத்தில் பணிபுரியும் 55 வயதான மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து யூனியன் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறறு வருகிறது மேலும் யூனியன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இன்று முதல் 2 நாட்கள் வரை அலுவலகம் மூடப்படுகிறது.
திருப்பூர் பெண் குழந்தையை விட்டு செல்ல இடமில்லாததால் குப்பை கூடையில் அமர வைத்து பணியாற்றுகிறார் தூய்மை பணியாளர்
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அம்மருத்துவமனை மூடப்பட்டது.
ராமநாதபுரத்தில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,268 ஆக அதிகரிப்பு. ராமநாதபுரத்தில் இன்று 2 பேர் உயிரிழந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று.
பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,395 ஆக உயர்வு
மொத்த உயிரிழப்பு – 26,
சிகிச்சை பெறுவோர்-1,444,
குணமடைந்தோர்-925
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே கோனுரில் அரசு டாஸ்மாக் கடையில் மது விற்பனையாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.திண்டுக்கல் பழனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,354ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர காவல் ஆய்வாளர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்யாறு காவல் நிலையத்தில் ஏற்கனவே, காவலர் ஒருவர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த 3 நாட்களாக காவல் நிலையம் மூடப்பட்டன. இதனைத்தொடர்ந்து, மேலும், புதிதாக 4 காவலர்கள் மற்றும் காவலர்களின் நண்பர்கள் குழுவினர் உட்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரியில் மேலும் ஒரு பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டதால் மங்கலம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 20 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். காவல்நிலையம் தற்காலிகமாக கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள புறநகர காவல் நிலையத்தில் செயல்படுகிறது. புதுச்சேரியில் கொரோனாவால் 2 காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம்
ஓமலூர் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது. அவர்கள் அனைவரும் பெரியார் பல்கலைக்கழக கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த பகுதிக்கு பொது மக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சாலையோர டீக்கடையில் தற்காலிக காவல் நிலையம் இயங்கி வருகிறது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட செயல்பட்டு வந்த சந்தையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சந்தை மூடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து மக்கள் இந்த சந்தையில் காய்கறிகளை வாங்கி வந்த நிலையில், அறிகுறி தென்பட்டால் உடனடியாக மக்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது
சென்னை
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 போலீசுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் குணமடைந்து பணிக்கு திரும்பிய 5 போலீசுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது